04-04-2004, 02:23 PM
பொது சன ஐக்கிய சுதந்திர முன்னணியே ஆட்சியமைக்கும். தமிழ்த் தேசிய முன்னணிக்கு 22 ஆசனங்கள்.
ஜ யாழிலிருந்து எழிலோன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 20:10 ஈழம் ஸ
தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக இன்னமும் அறியத்தரப்படவில்லை என்ற போதிலும், பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணியே ஆட்சியமைக்கும் எனத் தெரிய வருகிறது
இறுதியாக அனுமாணிக்கப்பட்டதன் படி, பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணி 105 இடங்களையும் (13 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக), ஐக்கிய தேசிய முன்னணி 82 இடங்களையும் (11 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக) பெறும்.
இதேவேளை தமிழ்த் தேசிய முன்னணி 22 இடங்களையும் (02 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக), ஐhதிக ஹிமல உருமய 09 இடங்களையும் (02 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக), சிறீலங்கா முஸ்லீம் காங்கிரல் 05 இடங்களையும், மலையக மக்கள் முன்னணி 1 இடத்தையும், ஈ.பி.டி.பி 1 இடத்தையும் பெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் மொத்தமுள்ள 9ஆசனங்களில் 8ஆசனங்களையும் தமிழ்த் தேசிய முன்னணியே கைப்பற்றியுள்ளது. தற்போதைய வாக்கு எண்ணப்படும் முறையின் பிரகாரம் 9வது ஆசனத்பை; பொறுவதற்கான வாக்குக்களில் தமிழ்த் தேசிய முன்னணிக்கு 2,800 வாக்குக்கள் தேவையாக இருந்தது. அதனால் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 18,612 வாக்குகளை பெற்ற ஈ.பி.டி.பி 9ஆவது ஆசனத்தைப் பெற்றது.
இதேவேளை, வாக்குகள் கணக்கெடுப்பின் போது நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீள எண்ணப்படவேண்டும் என்று தமிழ்த் தேசிய முன்னணியினர் கோரியிருந்தனர். எனினும் தனது அதிகார வரம்பிற்குள் சட்டம் இதற்கு இடமளிக்கவில்லையெனத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய முன்னணி நீதிமன்றினூடாக மேற்கொள்ளுமா என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
இதேவேளை பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் லக்ஸ்மன் கதிர்காமரே பிரதமராகும் வாய்ப்பு அதிகமிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த உத்தியோக அறிவிப்புக்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
யாழ் பகுதிகளில் தமிழ்தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய வரவேற்பு வைபங்களை ஏற்பாடு செய்யும் முயற்சிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் என்பன ஒன்றிணைந்து பல பகுதிகளிலும் இவ்வாறான வைபவங்களை ஏற்படுத்த முன்னிற்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>