04-04-2004, 01:36 PM
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட, தேர்தல் ஆணையத்தின் கூட்டம் சுமூகமாக முடிவடைந்துள்ளது
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 19:40 ஈழம் ஸ
அனைத்துக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் தலைமையையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டமொன்றை, தேர்தல் ஆணையாளர் இன்று காலை 10:30 மணியளவில் கூட்டியிருந்தார்.
அக்கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புக்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டதுடன், மீள்தேர்தலுக்கான மாவட்டங்களும் எவை என்று அறிவிப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவொரு பிரதேசத்திலும் மீள்தேர்தலொன்றை வைக்கும் அளவுக்கு எதுவித பாரிய குற்றச்சாட்டுக்களும் உறுதி செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை வெளியான எந்தவொரு தொகுதியிலும், மீள்தேர்தலுக்கான அவசியம் காணப்படவில்லை என்பதை தெட்டத்தெளிவாக தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டதாக எமது புதினம் நிருபர் குறிப்பிட்டுள்ளார்.
மீதி முடிவுகள் வெளிவர ஆரம்பித்துள்ள நிலையில், சந்திரிகா கட்சியினரும் Nஐ.வி.பி.யினரும், தமக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகும் என்று நம்பிக்கையுடன் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில், ஐ.ம.சு.முன்னணி, ஆகக்குறைந்தது 103 ஆசனங்களையாவது பெறாதவிடத்து, ஐக்கிய தேசிய முன்னணிக்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஹேல உருமய மொத்தம் 8 ஆசனங்களைப் பெறலாமென்றும், முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைப் பெறலாமென்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில், இந்த இரு சிறு கட்சிகளையும் இணைத்துக் கொள்வதாக இருந்தால் கூட, 100க்கும் அதிக ஆசனங்கள் சந்திரிகாவில் வசம் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்கும் 113 ஆசனங்களை உருவாக்கலாம்.
90 ஆசனங்களுக்கும் சற்று அதிகமாக ரணில் கட்சி பெறும் சந்தர்ப்பத்தில், கூட்டாட்சியை அமைக்கும் வாய்ப்பு ரணிலுக்கே அதிகமாகக் காணப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், சிறுபான்மைக் கட்சியோ, கட்சிகளோ உள்ளடக்கப்பட்ட கூட்டாட்சியே உருவாகவுள்ளதாக தற்போதைய முடிவுகள் கட்டியம் கூறுகின்றன.
Thanx: Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>