04-04-2004, 10:44 AM
கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் ஒதுக்கப்பட்டுவிட்ட தமிழ்க் குழுக்கள்!
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கையின் 13ஆவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் எந்தவொரு பிரதான அணியும் தனித்துப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ள அதேவேளைஇ ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்கா குமராதுங்க தலைமையிலான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது.
வடக்குஇகிழகில் போட்டியிட்ட தமிழ் கூட்டமைப்பு அடுத்த ஆட்சியாளர்களை நிர்ணயிக்கக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கின்ற எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தமிழ் கூட்டமைப்பு 23 ஆசனங்களைப் பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதால்இ எந்தவொரு அணியும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். அதேவேளையில் நாடு முழுவதிலும் போட்டியிட்ட சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயஇ இத்தேர்தலில் சிங்களப் பகுதிகளில் மூன்றாவது பலம் வாய்ந்த அணியாக உருவாகியிருக்கிறது. அதாவது பேரினவாத கருத்துக்களையும் ஒரே அடியாகப் புறக்கணித்துவிடமுடியாத நிலை அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதுவரையில் வெளியாகியுள்ள முடிவுகளின்படி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகளவு வாக்குகளைப் பெற்று கூடுதலான ஆசனங்களைப் பெற்று வருகின்ற போதிலும்இ பாராளுமன்றப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தேவையான 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஜே.வி.பியுடனான கூட்டுஇ ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெருந்தொகையான வாக்குகளை அள்ளிக் கொடுத்திருப்தைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளையில்இ சிங்கள மக்கள் மத்தியில் மூன்றாவது சக்தி வாய்ந்த அணியாக உருவாகியிருக்கும் ஜாதிக ஹெல உறுமய பெற்றுக் கொண்டுள்ள அதிகப் படியான வாக்குகள் பிரதான கட்சிகள் மூன்றையும் பெருமளவிற்கு பாதித்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தேசியப் பட்டியில் மூலமாக இவ்அமைப்பு குறைந்தபட்சம் 5 ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள பாரிய வெற்றி குறிப்பிடத்தக்கதொன்றாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்பு மொத்தமாகவுள்ள 9 ஆசனங்களில் 8 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. ஈ.பி.டி.பி. ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. சுமார் 1000 வாக்குகளாலேயே இந்த ஒரு ஆசனத்தை அவர்களால் தக்கவைக்க முடிந்துள்ளது.
ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு சுமார் 5000 வாக்குகளை மட்டுமே பெற்று மண் கௌவி இருக்கிறது. வன்னியில் மொத்தமாகவுள்ள ஆறு ஆசனங்களில் ஜந்தை கூட்டமைப்பு பெறக்கூடிய நிலையில் இருக்கின்றத. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் மொத்தமாகவுள்ள ஜந்து இடங்களில் நான்கு ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றிருப்பது ஒரு பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும். திருமலையில் இரண்டுஇ அம்பாறையில் ஒன்று என மொத்தமாக 21 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக இரண்டு அல்லது மூன்று ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 23 ஆசனங்களுடன் மூன்றாவது சக்தி வாய்ந்த அணியாக பாராளுமன்றத்திற்குச் செல்லவுள்ளது. தற்கால அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அணியாக கூட்டமைப்பு உருவாகியுள்ளது.
1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகளை நினைவுபடுத்துவதாகவே தற்போதைய தேர்தல் முடிவுகளும் அமைந்திருப்பது கவனித்கத்தக்கது. தனித் தமிழீழம் என்ற கோஷத்தை முன்வைத்து அப்போது தேர்தலைச் சந்தித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை தமிழ் மக்கள் பெற்றுக் கொடுத்தார்கள். வடக்குஇகிழக்கில் 18 ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போது பெற்றிருந்தது. அதன் பின்னர் வடக்குஇகிழக்கில் ஒரு சுமுகமான முறையில் நடைபெற்றிருக்கவேண்டிய தேர்தல் என்று கருதப்படும் தற்போதைய தேர்தலிலும் ஒரு தெளிவான ஆணையை தமிழ் மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். இந்த ஆணை எந்தளவு கவனத்தைப் பெறப் போகின்றது என்பதே தமிழர்களின் எதிர்கால அரசியலை
நிர்ணயிக்கும் காரணியாக அமைந்திருக்கும் எனக் கூறலாம்.
இந்தத் தேர்தில் அம்பாறை தவிர்ந்த வடக்குஇகிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலாவதாக தமிழ்க் கூட்டமைப்பு வந்திருக்கின்றது. திருமலையில் கூட்டமைப்பு பெற்ற வெற்றி இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இதனைவிட முக்கியமாக வடகிழக்கின் மொத்த வாக்குகளில் சுமார் 70 வீதமானதை தமிழ் கூட்டமைப்பு பெற்றிருப்பது ஒரு மிகப் பெரிய வெற்றி என்றுதூன் சொல்ல வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைக்குக் கிடைத்துள்ள அசைக்க முடியாத அங்கீகாரமாகவே இதனைக் கருத வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதையும்இ புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால தன்னாட்சி அரசுக்கான திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் இத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் அண்மைக்காலம் வரையில் அதில் ஒரு ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான குழுவினர் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றார்கள். நீண்டகாலம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் இத்தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றார். விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என ஏற்க முடியாது எனக் கூறிக் கொண்டு எதிர்காலத்தில் அரசியல் நடத்த முடியா நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசியல் என்பது விடுதலைப் புலிகளை மட்டும் மையமாகக் கொண்டது என்பதை இத்தேர்தலின் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன. புலிகளின் ஆதரவைப் பெறாத எந்த ஒரு தமிழ் அமைப்பும் எதிர்கால அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவின் எதிர்காலத்தைப் நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக இது அமைந்துள்ளது. மக்கள் சமாதானத்தை விரும்புகின்றார்களா? அல்லது மீண்டும் ஒரு போரைத்தான் விரும்புகின்றார்களா? என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. சர்வேதேச சமூகம் இந்தத் தேர்தலை கவனமாக அவதானித்ததற்கு அது மட்டும் காரணமல்ல. வடக்குஇகிழக்கு மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கப்போகின்றது? என்பதே இத்தேர்தலில் அதிகளவு கவனத்திற்குரியதாக இருந்தது. சரித்திரத்தில் முதல் தடவையாக விடுதலைப் புலிகள் இத்தேர்தலில் நேரடியாககச் சம்பந்தப்படுகின்றார்கள். தமிழரசுக் கட்சியின் பெயரில் தமது பூரண ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்கள்.
தமிழ்க் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டே இத்தேர்தலில் குதித்திருந்தது.. ஆகஇ இத்தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும்.....
விடுதலைப் புலிகள்தான தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட வாக்காகஇ புலிகளால் முன்வைக்கப்படப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக சபைக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகஇ கடந்த இரண்டு வருட காலமாக சமாதானப் பேச்சுக்களில் புலிகளின் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுஇ இந்தப் பேச்சுகள் தொடர வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் ஆணையாக அமைந்துள்ளது என்பதே உண்மை. ஆகஇ இத்தேர்தலில் தமிழ் மக்கள் சொல்லியுள்ள செய்தி முக்கியமானது.
1977ஆம் ஆண்டில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தமிழீழத்துக்கு தமது அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள். அந்த அங்கீகாரத்தையிட்டுஇ ஆணையைப் பெற்றவர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. ஆனால்இ இப்போது நிலைமைகள் அப்படியில்லை. இருபது வருட காலப் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் உணர்வுகள் எவ்வாறானதாக இருக்கின்றன என்பதை தேர்தலின் முடிவுகள் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த உணர்வுகளை சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளுமா? அதன் அடிப்படையில் தம்மைத் தாமே ஆளும் வகையிலான அமைப்பு ஒன்றைத் தமிழ் மக்கள் உருவாக்கிக் கொள்வதற்கான முன்னோடியாகஇ இடைக்கால நிர்வாக சபைக்கான அங்கீகாரத்தை சர்வதேச சமூகம் வழங்குமா? என்பனவே இப்போது எழுகின்ற கேள்வி! தமிழ் மக்கள் ஒட்டுமொத்த அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ள இந்த முடிவுகள் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் ஆரம்பமாக இருக்கும் என நிச்சயமாக நம்பலாம்.!
விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ்க் கூட்டமைப்புப் பெற்றுள்ள இந்தப் பாரிய வெற்றி தேசிய அரசியலில் எவ்வாறான செல்வாக்கைச் செலுத்தப் போகின்றது என்பதே அடுத்ததாக எழுகின்ற கேள்வியாகும். இரண்டு பிரதான அணிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டமைப்பின் ஆதரவு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள அமைப்பு என்ற முறையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியமைப்பதற்கு முதலில் அழைக்கப்படக் கூடும். அவ்வாறான நிலைமையில் அதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் ஆசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்ற கேள்வி எழுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கருணா குழுவினரின் ஆதரவை ஜனாதிபதி சந்திரிகா நாடலாம் என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் காணப்படுகின்றது. மட்டக்களிப்பிலும்இ அம்பாறையிலுமாக கருணாவுக்கு ஆதரவாக ஜந்து உறுப்பினர்கள் இருக்கப் போகின்றார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து துரோகி என்ற பெயருடன் வெளியேற்றப்பட்ட ஒருவருடன் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துவது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுகின்றது. ஆகஇ இந்தத் தேர்தலின் முடிவுகள் எதிர்காலம் தொடர்பான பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பிச் சென்றுள்ளன என்பதே உண்மை.
அதேவேளையில்இ கூட்டமைப்பின் சார்பாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தனிக் குழுவாக இயங்க முடியுமா? என்ற மிகப் பெரிய கேள்வி ஒன்று இப்போது எழுகின்றது. ஏனெனில்இ இவர்களது நியமனப் பத்திரங்களில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் மாவை சேனாதிராஜாவே கையொப்பமிட்டிருந்தார். எனவேஇ கட்சியின் தலைமைக்கு இசைவாக மட்டக்களப்பு - அம்பாறைப் பிரதிநிதிகள் செயற்படவில்லை என்றால்இ அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரம் மாவை சேனாதிராஜாவுக்கு உள்ளது என ஒரு தரப்பினர் கூறிக் கொள்கின்றார்கள். அதற்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பதற்கான அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உள்ளது.
மறுபுறத்தில் மட்டக்களப்பு - அம்பாறைப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் தனியாக இயங்க முடியும் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினை ஒரு சட்டச் சிக்கலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி - சூரியன் வெப்தளம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>