04-04-2004, 10:31 AM
<span style='color:red'>ரணில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா?
கொழும்பு:
வட இலங்கையில் யாழ்பாணம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இறுதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று முன் தினம் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. இந் நிலையில் யாழ்பாணம் உள்ளிட்ட வட இலங்கையின் இரு பகுதிகளில் ஓட்டுப் பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் சில கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் யாழ்பாணத்தில் ஓட்டுப் பதிவில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று அறிவித்த திஸ்ஸநாயகே, இன்றே (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கையும் முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுவரை எண்ணப்பட்ட 1.3 கோடி வாக்குகளில் அதிபர் சந்திரிகா தலைமையிலான விடுதலை முன்னணி 47.2 சதவீத வாக்குகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி 37.9 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணிக்கு 5.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
மொத்தம் 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் வேண்டும். ஜே.வி.பி. தவிர மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாததால் சந்திரிகாவால் அந்த இலக்கை எட்ட முடியாது என்றே கருதப்படுகிறது. அதே நேரத்தில் தமிழர் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் ரணிலை ஆதரிப்பதால் அவர்களது வாக்கு பலத்தை வைத்து அவர் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிக இடங்களில் முன்னணி பெற்றிருப்பது எங்கள் கட்சிதான். நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்றார்.
இந் நிலையில் வன்முறையின்றி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது குறித்து அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. புதிதாக அமையும் அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரும் என்று அமெரிக்க அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ரணிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தாலும் கூட, அதிபராக இருக்கும் சந்திரிகாவின் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமர் பதவியிலும் இருந்தால் தான் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று மக்கள் கருதியதாலேயே அவரது கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.</span>
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>