04-04-2004, 09:59 AM
<img src='http://www.thinakural.com/2004/April/4%20Sunday/heading.gif' border='0' alt='user posted image'>
நான்கு வருடங்களுக்குள் நடைபெற்ற மூன்றாவது பாராளுமன்றத் தேர்தலிலும் எந்தவொரு பிரதான கட்சியும் அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் தனித்து ஆட்சியமைக்க முடியாத சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றாலும், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டி ருக்கிறது.
அதேசமயம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய, தேசிய முன்னணியையும் வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.
இச் செய்தி எழுதுகையில் தேர்தல், ஆணைக்குழு உத்தியோகப10ர்வமாக வெளியிட்ட வாக்குகளின் பிரகாரம் சுதந்திர முன்னணிக்கு 46.4 சதவீத வாக்குகளும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு 35.9 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
பௌத்த பிக்குமார் போட்டியிட்ட ஜாதிக ஹெல உறுமயவுக்கு 6.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளென்ற நிலைப்பாட்டுடன் போட்டி யிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 சத வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களுக்கான தேர்தல் முடி வுகள் உத்தியோகப10ர்வமாக முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அளிக்கப்பட்ட வாக்குகளில் எண்ணப்பட்ட மூன்றில் இரண்டு தொகையின் அடி ப்படையில் ஜனாதிபதியின் கட்சியான சுதந்திர முன்னணி 106 ஆசனங்களையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி 80 தொடக்கம் 85 ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணிவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவின் பிரகாரம் 7 மாவட்டங்களில் சுதந்திர முன்னணிக்கு 32 ஆசனங்களும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு 22 ஆசனங்களும், ஹெல உறுமயவுக்கு 3 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>