04-04-2004, 09:26 AM
சிறிலங்காவில் ஆட்சியமைக்கும் கட்சி, உடனடியாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் - அமெரிக்கா
சிறிலங்காவின் 45 வீதமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க து}தரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபுூர்வ அறிவித்தலில் ஆட்சியமைக்கும் கட்சி, உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அரசுடன், வாசிங்டன் அரசு இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறதென்றும், நாட்டின் பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது அவசியம் என்பதை அந்த அறிக்கையில் பல தடவை சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - புதினம்