04-04-2004, 08:40 AM
பல லட்சம் கூடுதல் வாக்குகளுடன் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில்!
ஆட்சிஅமைக்க முடியுமா என்பது கேள்விக்குறி
வடக்கு - கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு அமோக வெற்றி
இதுவரை உத்தியோகப10ர்வமாக வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் சுதந்திரக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணியை விடப் பல லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று முன்னணியில் நிற்கிறது. எனினும் அந்தக் கூட்டமைப்பால் தனித்தோ அல்லது வேறு கட்சி களின் எம்.பிக்களுடைய ஆதரவுடனோ ஆட்சி அமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதேவேளை - வடக்கு - கிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழரசுக் கட் சிச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி யீட்டியிருக்கிறது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேரடி வாக்களிப்பு மூலம் 19 ஆசனங்களும்தேசியப் பட்டியல் மூலம் இரண்டு ஆசனங்க ளும் கிடைக்கலாம் என்பது உறுதி யாகிவிட்டது. தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து 1977 பெப். தேர்தலில் போட்டியிட்டபோது தமிழர் விடுத லைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றியது. அதற்குப் பின்னர் இப்போதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரதான அங்கமாகக் கொண்ட நான்கு கட்சிகளின் கூட்ட மைப்பான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு இவ்வளவு கூடுதலான ஆசனங்கள் கிடைக்கின்றன.
இது தமிழ்த் தேசியத்துக்கும,; புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் என்ற யதார்த்தத்துக்கும், தமிழினத்தின் இடைக்கால தன்னாட் சிச் சபைக் கோரிக்கைக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று கருத்தப்படுகிறது.
சமாதான முயற்சிகளை முன்னெ டுத்துச் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அர்ப்ப ணிப்புடன் ஈடுபடும் ஆட்சிக்கு ஆத ரவு அளிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
பிரதமர் ரணிலின் ஐக்கிய முன் னணி அரசு தமிழீழ விடுதலைப் புலி களுடன் யுத்தநிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டு சமா தானப் பேச்சுக்களில் ஈடுபட்டது. அதற்காகத் தமிழ்க் கூட்டமைப்பு முன்னைய நாடாளுமன்றத்தில் ரணி லின் ஐக்கிய தேசிய முன்னணி அரசை ஆதரித்தது.
இம்முறையும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்து சமாதானப் பேச்சு களை முன்னெடுத்துச் செல்லும் பட் சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவிர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கி ரஸ் இம்முறை தேர்தலில் தனித்தும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட்டது. புரிந் துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் இரு கட்சிகளும் செய்து கொண்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தவிர, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்தே தேர்தலில் போட்டியிட்டது. அமைச்சர் சந்திரசேகரனின் மலை யக மக்கள் முன்னணியும் நுவரெ லியா மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டது தவிர கொழும்பு ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்தும் போட்டியிட்டது.
எனவே, தமிழத் தேசியக் கூட்ட மைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலை யக மக்கள் முன்னணி ஆகியவற் றின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்க வின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு உண்டு. ஐக்கிய தேசிய முன்னணிக்கு சுதந்திரக் கூட்டமைப்பை விடச் சற் றுக்குறைவான எண்ணிக்கையில் நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத் தாலும் ரணில் விக்கிரமசிங்க மற்றக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கி றது. ஆட்சி அமைப்பதற்கு ஆகக் குறைந்தது 113 ஆசனங்கள் தேவை. சுதந்திரக் கூட்டமைப்பு கூடுதலான வாக்குகளுடன் முன்னணியில் நின் றாலும் அதற்குத் தனியாக ஆட் சியை அமைப்பதற்கு வேண்டியளவு ஆசனங்கள் கிடைப்பது சாத்திய மில்லை. வேண்டுமானால், ஜாதிக ஹெலஉறுமயவின் ஆதரவைக் கோரலாம். அதற்கு சுதந்திரக் கூட்ட மைப்பின் பிரதம பங்களியான ஜே. வி.பி. விடாது. இரண்டு இனவாத இடதுசரிக் கட்சிகளுக்கும் ஒருபோதும் ஒத்துவருவதில்லை. இந்தக் காரணங்களாலேயே ஐக் கிய தேசிய முன்னணியை விடக் கூடுதலான ஆசனங்களைச் சுதந்தி ரக் கூட்டமைப்பு வென்றாலும் அந் தக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இரண்டு கட்சிகளாலுமே தனியா கவோ மற்றவர்களின் ஆதரவுடனோ ஆட்சி அமைக்க முடியாத நிலைமை தோன்றுமானால் இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் இணங்கித் தேசிய அர சாங்கம் அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முன்பெல்லாம் முயற்சி செய்தவர் ஜனாதிபதி. அவர் இப்போது தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றித் தீவிர மாகச் சிந்தித்து வருகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்களி லிருந்து தெரியவருகிறது. ஆனால், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க உடன்படுவாரா என்பதுதான் கேள்வி
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>