04-04-2004, 08:33 AM
யாழ் குடாவின் இன்றைய நிலை.
ஜ யாழிலிருந்து மணிமாறன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 13:26 ஈழம் ஸ
தமிழ் தேசிய முன்னணி அறுதிப் பெரும்பாண்மையைப் பெற்று யாழ் குடாவில் வெற்றியீட்டியுள்ளதை சகிக்க முடியாதவர்கள் (ஈ.பி.டி.பி மற்றும் சங்கரி குழுவினர்) இப்போது தேர்தல் ஒழுங்காக நடைபெறவில்லையென்று குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, தேர்தல் ஒழுங்கான முறையில் நடைபெறவில்லையென்றும், வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெற்றன என்றும் குற்றஞ்சாட்டியுள்ள ஆனந்தசங்கரி (பூட்டு) சுயேட்சைக் குழுவினர் யாழ் குடாநாட்டின் மொத்த வாக்களிப்பில் ஒரு வீத வாக்குகளைத் தானும் இவ் வாக்களிப்பில் பெறவில்லை.
எனவே தங்கள் பங்கிற்கு ஒரு வீத வாக்குக்களைக் கூட பெற முடியாத இவர்கள் தமக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதை மறைக்கவே வேண்டுமென்ற குற்றச்சாட்டை முன்வைத்து உண்மைகளை மறைக்க முயற்கின்றார்கள் என்பதே மக்களின் கணிப்பாக உள்ளது.
இதே போன்றே அரசாங்கத்தின் ஐந்தாம் படையாகச் செயற்படும் உதிரிக்குழுவான ஈ.பி.டி.பியும் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று தேர்தல்களிலும் பல தில்லுமுல்லுக்களையும், கொலைகளையும் செய்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய மேற்படி குழு இப்போது கூட ஒரு பாhhளுமன்ற உறுப்பினரைப் பெற முடிந்தது அதன் தில்லுமுல்லுக்களாலேயே என்பதை மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
அதிலும் சு10ரியக்கதிர் இராணுவ நடவடிக்கையையடுத்து மக்கள் யாழ் குடாவிலிருந்து வெளியேறிய பின், இராணுவத்தின் ஒரு அங்கமாக குடாநாட்டிற்குள் புகுந்து கள்ளவாக்குக்களாலேயே பதவிகளைத் தக்கவைத்த ஈ.பி.டி.பி. மக்களிடமிருந்து அந்நியப்பட்டதை அறியாதவர்களாக நடிக்க முயல்கிறார்கள் என்பதையே அவர்களது தேர்தல் குறித்த கருத்துக்கள் தெரிவிக்கின்றன என்பதே பரவலான கருத்தாகவுள்ளது.
குறிப்பாக கடந்த நான்கு பாராளுமன்றத் தேர்தல்களிலும் 9 உறுப்பினர்கள்- 5 உறுப்பினர்கள்- 2 உறுப்பினர்கள்- 1 உறுப்பினர் என்ற இறங்குமுக நிலைக்கு வந்துள்ள அரச-ஆதரவு ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி பல இடங்களில் மோசடி வாக்களிப்பில் ஈடுபட்டதென்றும் அவ் வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளிப்பு மீள இடம்பெற்றால் அது தனது ஒரு உறுப்பினரைக்கூட இழக்கும் என்றும் மக்கள் பரவலாகப் பேசி வருகின்றனர்.
அதாவது இந்த இரண்டு குழுக்களும் கூறும் தேர்தல் வன்முறைகள் பற்றி விசாரித்தால் அவர்களே குற்றவாளிகளாகக் காணப்படுவார்கள் என்பதை மறந்து அவர்கள் ஏதோ அப்பாவிகள் போன்ற தோற்றத்தைப் பெற முயல்வது பற்றியே மக்கள் நகைச்சுவையாகப் பேசி வருகின்றனர்.
குறிப்பாக பணத்தால் மக்களையோ உணர்வுகளையோ, வாக்குக்களையோ விலைக்கு வாங்க முடியாது என்ற உண்மையை மறந்து, தாங்கள் பணம் கொடுத்தவர்கள் எல்லாம் தங்களிற்கு வாக்களிப்பார்கள் என்று இந்த இரண்டு குழுக்களும் நம்பியதானது அவற்றின் தமிழ்த் தேசியம் பற்றிய அறியாமையை எடுத்தியம்புவதாகவே மக்களின் கருத்துக்கள் இருந்து வருகின்றன.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>