04-04-2004, 01:31 AM
பிந்திய செய்தி: பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் ஒரு வாரம் எடுக்கலாம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 6:46 ஈழம் ஸ
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகள், தேர்தல் வன்முறைகள் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி முடிவுகள் வெளியாக ஒரு வாரம் எடுக்கலாம் என்று பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை வகிக்கும் இரு இடங்களில் தேர்தல் ஒழுங்கீனங்கள் இடம்பெற்றமை உறுதிசெய்யப்பட்டதால், அவை ரத்து செய்யப்பட்டு புதிய தேர்தல்கள் நடைபெற முடிவாகியுள்ளதாகவும், இறுதி முடிவுகள் வெளிவர ஒரு வாரத்திற்கும் மேல் எடுக்கலாம் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐனாதிபதி சந்திரிகாவின் கூட்டணிக் கட்சி ஆகக்கூடிய ஆசனங்களைப் பெறுமென்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கின்ற போதிலும், அறுதிப் பெரும்பான்மைப் பலம் அக்கட்சிக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற நிலையில், சிறுபான்மைக் கட்சியொன்றுடன் இணைந்து தாமே ஆட்சிப்பீடம் ஏறப் போவதாக, ஐனாதிபதியின் பேச்சாளர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், ஆட்சியமைப்பதற்கான போதிய ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் இல்லாத நிலையில், தனது கட்சிக்கே சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் தமது ஆதரவை வழங்கவுள்ளதால், தானே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதாக திரு.ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.
ஏற்கனவே ஒட்டுமொத்த தேர்தல் தொகுதிகளில் 45 வீதமான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
ஐ.ம.சு.முன்னணியும், ஐ.தே.முன்னணியும் மிகப்பெரிய அளவில் வித்தியாசமான எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெறாதவிடத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆட்சியிலமரும் கட்சியைத் தீர்மானிக்கும் என்றும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>