07-04-2003, 10:35 AM
பெரும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை எதிர்வரும் ஞாயிறன்று கூடுகிறது. தலமைப் பதவியிலிருந்து ஆனந்த சங்கரியை விலக்குவது என்பதே இப்பொதுச் சபை கூட்டப்படுவதற்கான பிரதான காரணமாகும் எனினும் கூட்டணியும், தலைவர் ஆனந்த சங்கரியும் எதிர் நோக்கியுள்ள பிரச்சினை வெறுமனே நபர்களுக்கு இடையேயான போட்டி, பொறாமையின் விளைவு அல்ல. மாறாக தமிழ் மக்களின் சொற்களுக்கு கட்டுப்பட்டு கூட்டணி நடக்கப் போகிறதா? அல்லது கூட்டணி தன்மானமற்ற அரசியற் கட்சியாக தொடர்ந்து செயற்படப்போகிறதா? என்பதே இன்றுள்ள வினாவாகும். இக்கேள்விக்கான விடை பெரும்பாலும் அடுத்த வார முற்பகுதியில் கிடைத்துவிடுமென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். துணிச்சலான கருத்துக்களைத் தெளிவோடும், நம்பிக்கையோடும் வெளியிட்டு வந்த ஆனந்தசங்கரி கூட்டணியின் தலமைப் பதவியிலிருந்து து}க்கி எறியப்பட்டால் அது ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் நேசிக்கும் சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

