04-03-2004, 11:20 PM
இலங்கையில் சந்திரிகா கூட்டணி ஆட்சி? புலிகள் ஆதரவு கூட்டணிக்கு அதிக இடங்கள்
கொழும்பு, ஏப். 4: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
தேர்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. ஒரு கோடிப் பேர் வாக்களித்துள்ள இத்தேர்தலின் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னதாக எண்ணப்பட்டதன் அடிப்படையில், 10 மாவட்டங்களில் 82 இடங்களுக்கான முடிவுகள் வெளியாயின. அவற்றில் 47 இடங்களை சந்திரிகா கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது.
சந்திரிகாவின் கூட்டணிக்கு 46.4 சதவீதமும் பிரதமரின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 35.9 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.
"தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இது கிடைக்காமல் போனாலும் ஆதரவாளர்களையும் அணைத்துக் கொள்வோம்' என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஹாரிம் பீரிஸ் தெரிவித்தார்.
எனினும் சந்திரிகா கூட்டணியின் பிரதமர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. தனது கட்சி எம்.பி.க்களில் ஒருவரைப் பிரதமராக அவரே அறிவிப்பார் எனத் தெரிகிறது.
சிங்கள பெüத்த துறவியர் தொடங்கியுள்ள புதிய கட்சியான தேசிய சிங்கள பாரம்பரியக் கட்சி 3 இடங்களை வென்றிருக்கிறது.
வடகிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசிய கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் மொத்தம் 18 இடங்களுக்கு மேல் கிடைக்கும் நிலையில் உள்ள அக்கூட்டணி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கூட்டணியாக அமைந்துள்ளது.
இதன் மூலம் முதல் முறையாக விடுதலைப் புலிகளின் செல்வாக்கு நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.
அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டால், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 இடங்களில் 8 இடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குக் கிடைக்கும். மட்டக்களப்பில் 4 இடங்கள், திரிகோணமலையில் 2 இடங்கள், வன்னிப் பிரதேசத்தில் 6 இடங்களை அக்கூட்டணி கைப்பற்றும்.
தமிழர் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தவுக்கு ஓரிடம் கிடைத்துள்ளது.
நன்றி - தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>