04-03-2004, 11:00 PM
நான் எவர் மனதையும் புண்படுத்த விளக்கம் கோரவில்லை. எனது நிலையை தெளிவுபடுத்தவே சிலதை எழுதினேன். பெருமனதுவந்து கருத்து எழுதிய அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றிகள்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆசையிருக்கும். அதற்கு ஏதாவதொரு விதத்தில் களங்கம் வரும்போது மனம் சஞ்சலமடைவதைத் தவிர்ப்பது கடினம். என்னைப் பொறுத்தளவில் சிறுகதை எழுத்தாளனாக ஒரு சிலருக்காலும் அறிமுகமானவனாக இருப்பதை விரும்புகிறேன். மற்றும்படி கவிதை என்ற பெயரில் நான் எழுதுபவைகளை கிறுக்கல்களாகத்தான் பார்க்கிறேன்.
ஆக, தற்போது கணனி குடும்பம் என்று பல சுமைகள்.. எனினும் இடையிடையே பாழும் ஆர்வம் எதையாவது எழுது என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்.. ஆனாலும் பல இடையூறுகளைக் கடந்து சிலதே வெளிவரும். அப்படி வருபனவற்றிற்கு அதற்கு (தரம்.. உள்ளடக்கம்) சம்பந்தமில்லாமல் சில சேற்றுருண்டைகள்.. அதுவும் எழுத்துக்களுடன் பரிச்சமானவர்களாலேயே விசிறப்படும்போது.. ஏதோ வருமானத்துக்கா எழுதுகிறோம்? அப்படியான நிலையேற்பட்டால் என்னென்ன வருமோ? என்ற சிந்தனை ஒருபுறம். கூடவே 'மெளனம் சம்மதம்' என்ற கூற்றுக்கு இலக்காகிவிடுவோமோ என்ற குழப்பம்.. ஏனெனில் ஊடகம் என்பது.. அதுவும் இணையம் என்பது எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. அந்தவகையில்.. சில கருத்துக்களை (உணர்ச்சிவசப்பட்டநிலையில்தான் நேற்று) முன்வைத்தேன். அது தவறோ சரியோ எனச் சிந்திக்கும் நிலையில் அப்போது இல்லை.
ஊனக்கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு என் நிலையை விளங்கப்படுத்த வேண்டிய நிலை இல்லாவிட்டாலும், இதால் ஏற்படும் விம்பத்தை கலைக்கவே விரும்பினேன்.
நன்றி. நன்றி மோகன். நன்றி யாழ் உறவுகளே!

.