04-03-2004, 05:35 PM
sOliyAn Wrote:நான் பாடசாலை நாட்களில் இருந்து எழுதி வருகிறேன். உயர்தர வகுப்பு படிக்கும்போது.. இலங்கையில் வெளிவந்த 'கலாவல்லி' (1977) சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசை பெற்றிருக்கிறேன். ஐரோப்பாவிலேயே முதன்முதல் கையெழுத்துப் பிரதியாக 'வசந்தம்' மாத எனும் சஞ்சிகைளை 9 மாதம் வெளிக்கொணர்ந்திருக்கிறேன். ஜேர்மனியில் வெளிவந்த பல சஞ்சிகைகளில் எழுதியுள்ளேன்.
தற்செயலாக யாழ் இணையத்தை பார்வையிட வந்தபோது சந்திரவதனா சாந்தி நளா ஆகியோர் எழுதுவதைப் பார்த்து.. ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அதன் மூலம் பல நட்புகள்.. கூடவே மோகனின் முகம் அறியா தொடர்பு.. அவரது ஆதரவு எனது ஆக்கங்களை இணைக்கவும் யாழுக்காக எழுதவும் உந்தியது. எல்லோருக்கும் நன்றிகள்.
ஆனால் இப்படியொரு கருத்து வந்த பிறகு.. தொடர்ந்து எழுதுவதா.. எழுதினால் அதற்கு வரும் வரவேற்பு நானே உண்டாக்கியதாக எண்ணம் ஏற்படுமா என்று நினைக்கிறேன்.. ஆகவே இதற்கு நளாயினியும் கண்ணனும் தரும் பதிலில் அல்லது விளக்கத்தில்தான்.. நான் மேலும் யாழில் எனது ஆக்கங்களை இணைப்பது தங்கியுள்ளது. இவர்கள் விளக்கம் தராத பட்சத்தில்.. இவர்கள் குறித்து யாழ் இணைய நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றாவது காண காத்திருக்கிறேன். அதுவரை கருத்துக்களத்தில் வழமையாகச் சந்திப்போம். நன்றி.
<b>சோழியான்
உங்கள் எழுத்து நடையும், எழுதும் பாணியும் அருமையானவை.
எல்லோரும் எழுதலாம். ஒரு சிலருக்குத்தான்
ஒரு சில திறமை இருக்கும்.
உங்களிடம் கதைகளை நயமாகக் கொண்டு செல்லும் திறன் உண்டு.
புள்ளிகளையும் விமர்சனங்களையும் ஒரு புறம் விட்டு விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.
காற்று</b>

