04-03-2004, 04:34 PM
kuruvikal Wrote:<span style='color:red'>சில தொகுதிகளில் ஈ.பி.டி.பி.யின் கள்ள வாக்கு மோசடிகள் கண்டுபிடிப்பு
குறிப்பாக கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளில், ஈ.பி.டி.பி. கள்ள வாக்குகளைப் போட்டுள்ள மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கள்ள வாக்குகள் மூலம் 3 ஆசனங்களையாவது தாங்கள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இப்போது 8 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே என்பது உறுதியாகி விட்டது. 1 ஆசனம் மட்டுமே ஈ.பி.டி.பி.க்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த ஒரு ஆசனம் கிடைத்ததையிட்டு, யாழ். மக்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. </span>
நன்றி புதினம்....!
<span style='color:blue'>இதில் உண்மை இருக்கும் போலத்தான் தெரிகிறது...கிழக்கில் சில நூறு வாக்குகளைப் பெற்ற குறிப்பிட்ட
தேசவிரோதக் கும்பல்...எப்படி யாழில் மட்டும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது....இக்கும்பலினால் கடந்த காலங்களில் மோசடி வாக்குகள் பெறப்பட்ட அதே சில தொகுதிகளில் தான் இம்முறையும் வாக்குகள் விழுந்துள்ளதாக காட்டப்படுகிறது....!
முதலில் இந்த விகிதாசார தேர்தல் முறையைக் களைய வேண்டும்...ஒரு தொகுதியிலும் பெரும்பான்மை பெறாது சில நூறு வாக்குகளை தொகுதிக்குத் தொகுதி பெற்று... பெறப்பட்ட மொத்தவாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையின் கீழ் எப்படி ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கான மக்கள் பிரதிநிதியாக ஒருவர் பாராளுமன்றம் போக முடியும்....????! <b>இதுதான் சன நாய் அகமோ....!</b>
-------------------
[size=16]<span style='color:red'>வாக்களிப்பில், 1 வீத வாக்கைக் கூடப் பெற முடியாமற் தோற்றுப்போன ஆனந்தசங்கரி
கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், பொலிஸ் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் பெற்று, கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்களுடாக தனது வெற்றி நிட்சயம் என்று கூறி வந்த ஆனந்தசங்கரிக்கு, யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் கடுமையான பாடத்தைக் கொடுத்துள்ளன.
யாழ். தேர்தல் முடிவின்படி, படுதோல்வியடைந்துள்ள ஆனந்தசங்கரி, தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்த ஆனந்தசங்கரி, உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஒருவரே பல தடவை வாக்குப்போட்டதுடன், கடுமையான பல ஒழுங்கீனங்கள் நிகழ்ந்ததாகவும், இது தேர்தலேயல்ல, இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிபெற்ற வேட்பாளர் திரு.மாவை சேனாதிராஐh, தோல்வியடைந்தவர்கள் வழமையாகச் சொல்லும் கருத்துக்களையே அவரும் சொல்லியுள்ளார். அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார். </span></span>
நன்றி புதினம்....!
ஆவிகளைத் தேடும் சங்கரியார்.
Monday, 29 March 2004
தேர்தல் வந்தால் வேட்பாளர்களுக்குப் பழைய உறவுகளின் ஞாபகம் பொத்துக்கொண்டு வரும் என்பது உண்மைதான் அதுவும் மலரும் நினைவுகளுடன் - பொங்கும் பாசத்துடன் வரும் ஞாபகங்கள் அவர்களை வீடு தேடிப் போகச் செய்யும் அக்கறையோடு சுகசேமங்களை விசாரிக்கச் செய்யும்.
அரவணைத்து முத்தமிட்டுவேண்டுமானால் கையெடுத்துக் கும்பிட்டோ, ஆரும் சுற்றிவர இல்லாவிட்டால் காலில் விழுந்து வணங்கிஇ மெய்விதிர்த்துப் புல்லரித்து நின்று வாக்குக்காக யாசிக்கச் செய்யும்.
இதுவும் சிறிலங்காவின் சனநாயகத்தில் ஒரு வழமையான அம்சம்தான்..........
ஆனால் சங்கரியாரின் அணுகுமுறையோ வன்னிப் பகுதியில், அதுவும் தன்னால் உருவாக்கப்பட்டதாக தம்பட்டமடிக்கும் கிளிநொச்சிப் பகுதியில் உள்ள பழம்பெரும் மனிதர்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
அவர் மலரும் நினைவுகள் உந்த, கடந்த இரு தசாப்தத்திற்கும் முந்திய தொடர்புகள் சிலவற்றைப் புதுப்பித்துக்கொள்ளுமாப் போன்று தனிப்பட்ட கடிதங்களை எழுதியுள்ளாராம்.
சுகசேம விசாரிப்புகளுடன், அவர்கள் நிதானத்துடன் வாழ்வதான, தொனிப்பட எழுதப்பட்ட கடிதத்துடன் அன்பளிப்புகளும் (விளக்கமாகச் சொன்னால் லஞ்சமும்) அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆயிரம் ரூபாய் முதல் ஆளின் தன்மைக்கும் தகைமைக்கும் ஏற்ற இந்தப் பணம் 5000 வரை அனுப்பப்பட்டுள்ளதாம்.
இதனை அன்பளிப்போ-லஞ்சமோ என்று எவரும் கருதாமல் இருக்க, வன்னியிலிருந்து வாக்களிக்கச் சென்றுவருவதற்கான செலவுக்காக... என்று இந்தப் பணத்தை அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
ஆ.....! என்ன பொறுப்பு... என்ன அக்கறை... எல்லாவற்றையும் இந்தத் தள்ளாத (பதவியைக்கூட) வயதிலும் என்ன ஞாபகம்....
சங்கரியார் சாமானிய ஆளல்லதான்...!
இன்னொரு முக்கியமான விடயம்
சில காலஞ்சென்ற நபர்களுக்கும் கூடக் கடிதமும் பணமும் வந்துள்ளதாம்...
ஆவிகளிடம் வாக்குக் கேட்க முயற்சிக்கிறாரா? அல்லது இல்லாதோரின் வாக்குகளையும் தனக்கு அளிக்குமாறு கேட்கிறாரா?
யாரோ அவருக்குத் தேர்தலுக்கென அள்ளிக்கொடுத்திருக்க வேண்டும். இவர் அதில் கிள்ளிக்கொடுக்கிறார் அவ்வளவுதான்.
இன்னொரு முக்கிய விடயம். தான் அனுப்பியுள்ள கடிதத்தில், எக்காரணம் கொண்டும் தாயக விடுதலைக்கு விரோதமாகவோ, முரண்பாடாகவோ தானோ தனது குழுவைச் சேர்ந்தவர்களோ நடக்கப்போவதில்லை என்று சத்தியப்பிரமாணமும் செய்துள்ளாராம்.!
ஜயா சங்கரியாரே இந்தத் தேர்தலைத் தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டுமென விடுதலைப்புலிகளே கோரிக்கை விடுத்துள்ள நிலையில்இ அதற்கு மாறாக, எதிராக, ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் யார்யாரோ கொடுத்த அழுத்தத்திற்கும் அறிவுறுத்தலுக்கும் அடிபணிந்து சுயேட்சைக்குழு அமைத்துத் தேர்தலில் போட்டியிட முனைந்து தாயக விடுதலைக்கு முரணான நடவடிக்கையில்லாமல் வேறென்னவாம்.?
இறந்தவர்களுக்குக் கடிதம் எழுதும் சங்கரியாருக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது.
செங்குட்டுவன்- ஈழநாதம்
கிளிநொச்சி மக்களுக்குத் தான் அனுப்பிய பணம் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் வெளியாரிடன் கடன் வாங்கிய பணம் என்றும் தனக்கு வாக்குப் போடாத மக்கள் தனது இக்கட்டான நிலையை உணர்ந்து கொண்டு அப்பணத்தை உடனடியாக திருப்பி அனுப்புவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாக ஆனந்த சங்கரி B.B.C இக்குப் பேட்டியளிப்பு என்ற செய்தி குழலூதும் அவ்வூடகத்தில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்
\" \"

