Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிது
#42
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆரம்பமான பேச்சுவார்த்தை குறித்து பெரிய சாதனைகள் நிகழ்ந்துள்ளதாகவும் மக்கள் அமைதி வாழ்க்கை வாழ்வதாகவும் புலிகளும் சரி, அரசும் சரி கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தம்பட்டமடித்துக் கொண்டிருக்க செய்தி ஊடகங்;கள் ஒத்து}திக்கொண்டிருக்கின்றன.

அண்மையில், சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்சியில் பங்குகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் தமிழ் ஊடகங்களைப்பற்றி குறி;ப்பிடுகையில் இந்த ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனக் குறிப்பிடவில்லை எனவும் சிலர் தங்கள் சொந்த நலன்களுக்காக அப்படியான கருத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் வடக்கு கிழக்கில் தாம் அதிகாரம் செலுத்தும் உரிமை பற்றி பேரம் பேசியே அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததேதவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் தொடர்பாகப் பேசப்பட்டு அதில் ஒரு இணக்கப்பாடு காணமுடியாமல் தோல்வியடைந்தது என்று கூறுவதற்கில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் புலிகளுடன் பெங்களுரில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தங்கள் இயக்க நலன்களையே முதன்மைப்படுத்தினர்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜுலை 24 ஆம் திகதி இந்திய விமானப்படை ஹெலிமூலம் பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து புதுடில்லி அழைத்து செல்லப்பட்டார். அதன்பின்னர் ஜூலை 29 திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரபாகரனின் இந்தியப்பயணம் தொடர்பாக அப்போது புலிகள் இயக்கம் விடுத்த பத்திரிகை அறிக்கையில் புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் அதிகாரபுூர்வமான ஏகப்பிரதிநிதிகள் என அங்கீகரிக்க இந்தியா ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்த அறிக்கையின்படி புலிகள் தம்முடைய ஏக பிரதிநித்துவத்தை ஏற்க வைப்பதற்காகவே இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரும் தமது அதிகாரத்தைப் நிலைநாட்டும் வழிகளிலேயே புலிகள் செயற்பட்டனர். அதற்கு தமது உறுப்பினர்களையோ அன்றி பொது மக்களையோ பலிகொடுக்கவும் தயாராக இருந்துள்ளனர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர்.

திலீபன்,அன்னை பூபதி ஆகியோரை உண்ணாவிரதம் இருக்கச் செய்து அவர்களை பலிகொடுத்தனர். கடலில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 புலி உறுப்பினர்களுக்கு சிறையில் சயனைட் குப்பிகளை அனுப்பி அவர்களை உட்கொள்ளச் செய்து அவர்களை பலிகொடுத்தனர்.

இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் ஆரம்பித்தபோது பிரபாகரன் விடுத்த செய்தியில் நாம் எம்மைப் பாதுகாக்க போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் இதனால் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு இந்தியாவே முழுப் பொறுப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். தமிழ் மக்களின் ஏகபிரதிநிகள் தாம் என கூறிக்கொள்ளும் ஒரு இயக்கத்தின் பொறுப்பான தலைவரின் செய்தியாக தெரியவில்லை.

இந்தியப்படையின் தாக்குதலால் மோசமான அழிவுகளை சந்தித்த புலிகள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி இந்திய அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அதில் 1987 செப்ரெம்பர் 28 உடன்படிக்கையின்படி இடைக்கால நிர்வாக சபையில் பெரும்பான்மையான இடங்களை அதாவது 12 உறுப்பினர்களில்; 7 உறுப்பினர்களை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் பிரேமதாசாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் ஏகபிரதிநித்துவத்தை வலியுறுத்தியிருந்தனர். சந்திரிகாவுடன் நடைபெற்ற பேச்சுவர்த்தையின்போதும் அதையே வலியுறுத்தியிருந்தனர்.

தற்போது நடைபெறும்; பேச்சுவார்த்தைகள் பின்னடைவதற்கும் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கும் புலிகளின் இந்த ஏகப்பிரதிநித்துவ கோரிக்கையே காரணமாயிருந்துள்ளன.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தாலும் அது மக்களை பெரிதாக பாதித்ததேயன்றி புலிகள் யுத்த தந்திரோபாயரீதியில் பல நன்மைகளைப் பெற்றிருந்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்போது இந்தியாவிடம் பணம் பெற்றனர். பிரேமதாசாவுடன் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பணம் ,ஆயுதம், சீமெந்து போன்ற உதவிகளைப் பெற்றதுடன் கொழும்பில் தங்கி இருந்த மாற்று இயக்கங்களை அழிப்பதற்கும் இலங்கை இராணுவ உதவிகளைப் பெற்றனர். இப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம் மாற்று இயக்கங்களை நிராயுதபாணியாக்கிய புலிகள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சுதந்திரமான அரசியல் வேலைகள் என்ற போர்வையில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மக்களிடம் வரி,கப்பம், கடத்தல்கள்மூலம் பணம் சேர்த்து வருகின்றனர். இதுவரை வருமான வரி என்பதை அறியாத மக்கள்கூட புலிகளுக்கு வருமான வரி செலுத்தும் நிலை தோன்றியுள்ளது. அரசுக்கு வரி செலுத்த ஒரு வருமான அளவீடு உள்ளது. ஆனால் புலிகளுக்கு மக்கள் பெறும் ஒவ்வொரு சதவருமானத்திற்கும் வரி செலுத்தவேண்டியுள்ளது.

அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த புலிகள்;; ஆரம்பத்தில் ஏனைய அமைப்புகளை இல்லாமல் செய்வதிலும் தங்களை வளர்த்துக் கொள்வதிலும் இராஜதந்திரத்துடன் செயற்பட்டனர். அதன் பலனாக நான்கு கட்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்புமூலம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்தனர்.

இந்த கூட்டில் சங்கமமாகாத புளொட், ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர்அணி) ஆகிய அமைப்புகளை கொலைகள் மூலம் அழிப்பதில் புலிகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்;.

வடக்கு கிழக்கிலும்; கொழும்பிலும் புலிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொலைகளை அரசாங்கமும் கண்டும் காணாமல் இருந்தது. ஆனால் அண்மையில் கொழும்பு தலைநகரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் புலிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து இப்போது நாளாந்தம் சுற்றிவளைப்பு தேடுதலில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்காக கைதாகின்றனர். கடந்த சனிக்கிழமை தெகிவளை, கல்கிசை, மொரட்டுவை, இரத்மலானை ஆகிய பகுதிகளில் இராணுவ தேடுதல் வேட்டையின்போது 650 பேர்விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு மறுநாள் 39 பேர்தவிர்ந்த ஏனையோர் விடுதலையானார்கள். கடந்த அரசாங்கத்தில் இப்படியான கைதுகளை மனித உரிமை மீறல்கள் என கண்டித்து குரல் கொடுத்தவர்கள்; இந்தக் கைதுகள்பற்றி இப்போது மௌனமாகவே உள்ளனர்.

ஏதோ ஒரு விதத்தில் அரசும் புலிகளும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு இணக்கம் கண்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை விரைவில் காண அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. இடைக்கால நிர்வாகத்தைப் பற்றியே பேரம் பேசி காலத்தைக் கடத்துவதை விட்டு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதில் ஏற்படும் முரண்பாடுகளை நீக்குவதற்கு காலம் நீடித்தால் அது நியாயமானதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி ஒரு அரசியல் தீர்வு காணமுடியும் என்பதில் இரு தரப்பாருக்கும் நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுபற்றி பேசி அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இருபகுதியினருக்கும் பேச்சுவார்த்தை தொடர்பாக இருக்கும் உண்மையான நிலைப்பாடு, நோக்கங்கள் மூன்றாவது தரப்பு மூலம் அம்பலமாகலாம் என்பதுதான் இரு பகுதியினருக்கும் உள்ள அச்சமாகும். முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்பினரும் இரகசிய பேச்சுக்களை நடத்தியதால் அந்தப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தபோது அந்த தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டமுடிந்தது.

அண்மையில் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் கப்பல் தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இருந்ததால் அவர்கள் தமது விசாரணை அறிக்கையை இரு தரப்பினரிடமும் கையளித்துள்ளனர். அதில் .புலிகளின் கப்பலை சோதனை செய்வதற்கான உரிமை இலங்கை கடற்படையினருக்கு இருப்பதாகவும் புலிகள் தங்கள் கப்பலில் உகந்த கொடி எதையும் பறக்கவிட்டிருக்கவில்லை எனவும் இதன்மூலம் கடல் சட்டம் தொடர்பாக ஐ.நா.சாசனத்தை புலிகள் மீறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் 12 புலி உறுப்பினர்களை கடற்படையினர் கைது செய்ததற்கான சான்று எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இவ்வறிக்கை புலிகளுக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது.

பேச்சுவார்த்தை தொடர்பாக வன்னியில் இருந்து வந்த முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவேண்டுமானால் அதாவது அரசியல் தீர்வை புலிகள் ஏற்பதானால் புலிகளின் தலைவருக்கு இந்தியா பொது மன்னிப்பு அளிக்கவேண்டும். இல்லையேல் புலிகள் இராணுவத்தீர்வையே விரும்புவார்கள் எனத் தெரிவித்தார். அந்த முதியவா
Reply


Messages In This Thread
புதிது - by sethu - 06-20-2003, 07:51 PM
[No subject] - by sethu - 06-20-2003, 07:53 PM
[No subject] - by sethu - 06-20-2003, 07:55 PM
[No subject] - by Kanani - 06-20-2003, 08:00 PM
[No subject] - by Kanani - 06-20-2003, 08:00 PM
[No subject] - by Kanani - 06-20-2003, 08:01 PM
[No subject] - by Kanani - 06-20-2003, 08:01 PM
[No subject] - by vaiyapuri - 06-20-2003, 08:07 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-21-2003, 11:32 AM
[No subject] - by sethu - 06-21-2003, 05:46 PM
[No subject] - by Manithaasan - 06-21-2003, 08:39 PM
[No subject] - by sethu - 06-22-2003, 12:27 PM
[No subject] - by yarlmohan - 06-22-2003, 06:21 PM
[No subject] - by sethu - 06-22-2003, 06:37 PM
[No subject] - by sethu - 06-24-2003, 09:50 AM
[No subject] - by P.S.Seelan - 06-24-2003, 12:34 PM
[No subject] - by GMathivathanan - 06-24-2003, 02:31 PM
[No subject] - by GMathivathanan - 06-24-2003, 02:39 PM
[No subject] - by sethu - 06-24-2003, 06:36 PM
[No subject] - by sethu - 06-25-2003, 02:26 PM
[No subject] - by sethu - 06-26-2003, 10:06 AM
[No subject] - by sethu - 06-27-2003, 12:55 PM
[No subject] - by GMathivathanan - 06-27-2003, 02:23 PM
[No subject] - by sethu - 06-27-2003, 07:38 PM
[No subject] - by S.Malaravan - 06-27-2003, 08:40 PM
[No subject] - by GMathivathanan - 06-27-2003, 10:41 PM
[No subject] - by sethu - 06-28-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-28-2003, 09:21 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 09:58 AM
[No subject] - by sethu - 06-28-2003, 10:13 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 10:27 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:30 AM
[No subject] - by sethu - 06-28-2003, 10:31 AM
[No subject] - by sethu - 06-28-2003, 10:33 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:38 AM
[No subject] - by sethu - 06-28-2003, 11:14 AM
[No subject] - by S.Malaravan - 06-28-2003, 09:38 PM
[No subject] - by sethu - 06-29-2003, 08:41 AM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 11:04 AM
[No subject] - by sethu - 06-29-2003, 11:07 AM
[No subject] - by nimo - 07-04-2003, 10:09 AM
[No subject] - by sethu - 07-04-2003, 10:15 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 10:59 AM
[No subject] - by sethu - 07-04-2003, 12:00 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 03:50 PM
[No subject] - by sethu - 07-04-2003, 05:42 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 05:55 PM
[No subject] - by sethu - 07-05-2003, 08:29 AM
[No subject] - by sethu - 07-05-2003, 10:30 AM
[No subject] - by GMathivathanan - 07-05-2003, 10:42 AM
[No subject] - by sethu - 07-05-2003, 11:47 AM
[No subject] - by sethu - 07-08-2003, 01:16 PM
[No subject] - by sethu - 07-19-2003, 08:47 PM
[No subject] - by sethu - 07-29-2003, 02:08 PM
[No subject] - by sethu - 08-03-2003, 07:53 PM
[No subject] - by sethu - 08-10-2003, 08:33 AM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:34 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:18 AM
[No subject] - by sethu - 08-29-2003, 09:10 PM
[No subject] - by shanthy - 08-29-2003, 09:22 PM
[No subject] - by Mathivathanan - 08-29-2003, 09:50 PM
[No subject] - by sethu - 09-03-2003, 06:46 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:36 PM
[No subject] - by sethu - 09-04-2003, 07:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)