04-03-2004, 03:08 AM
தீவுப் பகுதியிலும் அமைதியான வாக்களிப்பு
அசம்பாவித சம்பவங்கள் எதுவுமில்லை!
கடந்த பொதுத் தேர்தலின்போது பெரும் வன்முறைக்களமாக மாறி இருந்த தீவுப் பகுதியில் இம்முறை அமைதியான வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது.
குறிப்பிடக்கூடிய பெரிய அசம் பாவித சம்பவம் எதுவும் தீவுகளில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட வில்லை.
தீவுப் பகுதியின் முன்னரங்க கிரா மங்களான வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுக் கிரா மங்களில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கிறது.
அல்லைப்பிட்டி, மண்கும்பான் வேலணைக் கிராமங்களிலும் இந்த முறை வழமைக்கும் கூடுதலான வாக் காளர்கள் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர் களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் காணமுடிந்தது.
துறையூர்ப் பகுதி வாக்காளர் களுக்கான வாக்களிப்பு நிலையமான வேலணை கிழக்கு மகாவித்தியால யத்தில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் குறைந்தளவிலேயே வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அந்தப் பகுதிக் கிராம சேவையாளர் தெரிவித்தார்.
மண்கும்பான் பாடசாலையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த வாக்களிப்பு முக வர் ஒருவர் இளைஞர் ஒருவரிடம் அடையாள அட்டையைச் சமர்ப்பிக் குமாறு கேட்டபொழுது முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் -
இதில் தலையிட்ட தலைமை வகிக்கும் அலுவலர் அடையாள அட்டை தேவை இல்லை எனக் கூறி நிலைமையை அமைதிப்படுத்தியதா கவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை -
மண்டைதீவுக் கிராமப் பகுதியில் இடப்பெயர்வின் பின் முதல்முறை யாக எதிர்பாராத அளவில் அதிகள வான வாக்குகள் பதிவு செய்யப்பட் டன என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலத்தில் ஓரளவு கணிசமான அளவில் மக்கள் குடிய மர்ந்துள்ளனர். அத்துடன், யாழ். நக ரப் பகுதியை அண்டியுள்ள பகுதிக ளில் குடியமர்ந்துள்ள மண்டைதீவுக் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தமது வாக்குகளைப் பதிவு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
உயர் பாதுகாப்பு வலயமான மண்டைதீவுக் கிராமத்துக்கு அயல் கிராமப் பகுதிகளில் இருந்து வாக் களிக்கச் சென்றவர்களுக்கு அப்பகு திக் கடற்படை தாராளமாக ஒத்து ழைப்பு வழங்கியதாக வாக்காளர்கள் தெரிவித்தனர்.
வழமையான பதிவுகளோ, ஷபாஸ்| நடைமுறைகளோ நடைமுறைப்படுத்தப் படவில்லை. பண்ணைச் சந்தியிலும் அதற்கு சற்றுத் தள்ளி ஒருசில பத்து மீற்றர்களில் அமைந்துள்ள தடைக ளும் அகலத் திறந்துவிடப்பட்டிருந்தன.
பஸ் மற்றும் தனியார் வாகனங் களில் சென்றவர்கள் எவரும் இறக்கிச் சோதனை இடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மண்டைதீவில் இரண்டு வாக் களிப்பு நிலையங்கள் இருந்தபோதும் இலக்கம் 29 வாக்களிப்பு நிலையத் திலேயே பெருமளவானவர்கள் வரி சையில் நின்று வாக்களித்தனர்.
புங்குடுதீவுப் பகுதியில் மாணவர் கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர் என்று வானொலிச் செய்திகள் தெரிவித்தன.
நெடுந்தீவு, ஊர்காவற்றுறை பகு திகளிலும் வாக்களிப்பு இடம்பெற்றது.
இதேவேளை -
புங்குடுதீவில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயன்றனர் என்று கூறப்படும் 6 பேர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பாது காப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலை மையகம் அறிவித்துள்ளது. அவர்கள் அறுவரும் ஊர்காவற்றுறைப் பொலீ ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>