04-03-2004, 03:04 AM
யாழ்.தேர்தல் மாவட்டத்தில்
தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்!
9 ஆவது இடம் யாருக்கு என்று நிர்ணயிக்க
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்படுகின்றன
இன்று காலை 6மணிவரை கிடைத்த உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு) எட்டு நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைப் பது உறுதியாகியது. ஒன்பதாவது ஆசனம் தமிழரசுக் கட்சிக்கா அல்லது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கா என்பதனைத் தீர்மானிப்பதற்காகத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் இச்செய்தி அச்சாகும் வரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
முதற்கொண்டு எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையின் பிரகாரம் தமிழரசுக் கட்சிக்கு ஏழு ஆசனங்களும் ஒரு போனஸ் ஆசனமுமாக மொத்தம் எட்டு ஆசனங்கள் கிடைக்கும் என்பது உத்தியோகபூர்வமற்ற முறையில் அறியப்பட்டது.
மிகுதியான ஒன்பதாவது ஆசனம் தமிழரசுக் கட்சிக்கா அல்லது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கா(ஈ.பி.டி.பி) என்பதனை நிர்ணயிப் பதற்காகத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
யாழ்.மாவட்ட வாக்குகளை எண்ணும் பணி நேற்றிரவு 9.30 மணியளவில் ஆரம்பமானது. முதலில் தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தமிழரசுக்கட்சியே அதிக வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து தொகுதிhPதியான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பித்தன. ஆரம்பம்முதலே தமிழரசுக் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டமைப்பு முன்னணி வகித்தது. இரண்டாவது இடத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பிடித்தது. எனினும், ஒவ்வொரு தொகுதியிலும் ஒருசில ஆயிரம் வாக்குகளை அது மட்டுமே பெற்றிருந்தது. மூன்றாவது இடத்திலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான சுயேச்சைக்குழு - ஒன்று ஒவ்வொரு தொகுதியிலும் சிலநு}று வாக்குகளை மட்டுமே பெற்றது.
காலை 6 மணிவரையும் எண்ணிமுடிக்கப்பட்ட 7 தொகுதிகளின் முடிவுகளின் பிரகாரமும் ஏனைய வாக்குகளின்படியும் யாழ்.மாவட்டத்தில் அனைத்து ஆசனங்களும் தமிழ்க்கூட்டமைப்புக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏனைய தொகுதி முடிவுகளும் புத்தளத்தில் இருந்து வரவேண்டிய முடிவுகளும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவையும் கிடைக்கும்போது சிலவேளைகளில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாக்குகள் எண்ணும் பணிகள் இச்செய்தி எழுதப்படும்வரை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>