04-03-2004, 02:57 AM
பிளவு முழக்கம் இழவு விளைக்கும
மட்டு நகர் பெற்றெடுத்த உலகப்புகழ்பூத்த உணர்ச்சிக் கவிஞர் காசி அண்ணனிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற கவிதை பிளவு முழக்கம் இழவு விளைக்கும் என்று எச்சரிக்கிறது.
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு
எழிலார் தமிழீழ உறுதி துண்டிரண்டாய்க்
கிழிபட விடாதே!
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு
நாற்திசை பாரடா மாற்றர் நகையொலி
காற்றிலே எழுந்தது -
கவனி விழித்தெழு
பிளவு முழக்கம் இழவு விளைக்கும்
எழடா ஒரே தாய் மண்ணாய் எழு நீ
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
பொன்தமிழீழம் மீட்கவே புலிகள் பல்லாயிரவர்
கல்லறையாயினர்
மாண்ட மாவீரர் கல்லறை மண்ணை
ஏண்டா தமிழீழம் இல்லலை என்றதார்?
கல்லறை வீரர் மூடிய கண் முன்
நில்லடா ஒன்றாய் நில்லடா ஒன்றாய்!
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
மட்டுமாநகரில் சிங்கள மறவர்
எட்டுத் திசையும் உலா எழும் இந் நாள்
உறவுத் தமிழனை, யாழ். உடன்பிறப்பை
பிறனென வெளியே பிடித்துத் தள்ளல்
என்னடா தமிழ் அறம்? எவன் நின் உறவு?
தன்னிலை இழந்தோ தடுமாறுகின்றனை?
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
கண்விழித்திரடா! பகைவன் கால் முன் போய்விழதே!
முகவரி இழப்பாய்.
வல்லான் பிரபாகரனின் சொல் வழி நட!
நில் தமிழினமாய் நின்று நீ நிமிர்
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
நன்றி - தமிழ் அலை நிழற் பதிப்பு
மட்டு நகர் பெற்றெடுத்த உலகப்புகழ்பூத்த உணர்ச்சிக் கவிஞர் காசி அண்ணனிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற கவிதை பிளவு முழக்கம் இழவு விளைக்கும் என்று எச்சரிக்கிறது.
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு
எழிலார் தமிழீழ உறுதி துண்டிரண்டாய்க்
கிழிபட விடாதே!
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு
நாற்திசை பாரடா மாற்றர் நகையொலி
காற்றிலே எழுந்தது -
கவனி விழித்தெழு
பிளவு முழக்கம் இழவு விளைக்கும்
எழடா ஒரே தாய் மண்ணாய் எழு நீ
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
பொன்தமிழீழம் மீட்கவே புலிகள் பல்லாயிரவர்
கல்லறையாயினர்
மாண்ட மாவீரர் கல்லறை மண்ணை
ஏண்டா தமிழீழம் இல்லலை என்றதார்?
கல்லறை வீரர் மூடிய கண் முன்
நில்லடா ஒன்றாய் நில்லடா ஒன்றாய்!
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
மட்டுமாநகரில் சிங்கள மறவர்
எட்டுத் திசையும் உலா எழும் இந் நாள்
உறவுத் தமிழனை, யாழ். உடன்பிறப்பை
பிறனென வெளியே பிடித்துத் தள்ளல்
என்னடா தமிழ் அறம்? எவன் நின் உறவு?
தன்னிலை இழந்தோ தடுமாறுகின்றனை?
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
கண்விழித்திரடா! பகைவன் கால் முன் போய்விழதே!
முகவரி இழப்பாய்.
வல்லான் பிரபாகரனின் சொல் வழி நட!
நில் தமிழினமாய் நின்று நீ நிமிர்
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
ஒன்றே தமிழீழம் என்றே முழங்கு!
நன்றி - தமிழ் அலை நிழற் பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

