04-02-2004, 04:45 PM
ஆட்சியமைக்கும் பெரும்பான்மைப் பலம், எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை: ஆய்வு
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 22:01 ஈழம் ஸ
சிறீலங்காவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்குத் தேவையான 113 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறப் போவதில்லையென ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆட்சியமைப்பதற்கான பலப் பாPட்சையில் இறங்கியுள்ள நிலையில், இரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்கள் கிடைக்கப்போவதில்லை என்று பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரணில் கட்சியை விட, ஐ.ம.சு.மு., ஒரு சில ஆசனங்கள் அதிகமாகப் பெறுமென்றும், இருந்தாலும், ஆட்சியமைக்கும் விடயத்தில் ஐ.தே.முன்னணிக்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது.
எதிர்பார்த்ததைவிட அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் புலிகளுக்கு வழங்கியதாக ரணில் கட்சியின் மேல் சிங்களப் பேரினவாதிகள் குற்றம் சாட்டும் அதே வேளையில், Nஐ.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்ததால், சந்திரிகா கட்சியின் மீதும் கடும் அதிருப்தி சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதனால், பெரும்பான்மைப் பலம்பெற்று, ஆட்சியமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்புக் கிட்டாது என்று கூறப்படுகிறது.
ஐhதிஹ ஹேல உருமய, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்பு ஆகியன, ஆளும் கட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்சிகளாக இம்முறை அமையுமென அக்கணிப்புத் தெரிவிக்கிறது.
புளொட், ஈ.பி.டி.பி., ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் போன்றவை, தங்களது கட்சிக்குக் கிடைக்கும் பதவிகளைப் பொறுத்தே யார் பக்கம் சார்வதென்று தீர்மானிப்பார்களென்றும், எப்படிப் பார்த்தாலும், தமிழ் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இரு பிரதான கட்சிகளும் முந்தியடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>