04-02-2004, 03:51 PM
சிறீலங்காவில் 13வது பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தொடரும் ஒரு வாரத்திற்கு பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் அனைத்தும் நாடுதளுவிய hPதியில் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், பொலிஸ் தேர்தல் அதிகாரி காமினி நவரத்ன அறிவித்துள்ளார்.
நள்ளிரவுக்குப் பின்னர், தேர்தல் முடிவுகள் அறிவிக்க ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதிகாலை வரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது தடுத்துவைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை எதுவித பாரிய வன்முறைகளும் நிகழவில்லை என்றும், இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கும் முடிவு குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் காமினி நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
அவசியமேற்படின், திடிர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதினம்.கொம்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>