04-02-2004, 03:46 PM
அராலியில் முருகமூர்த்தி வித்தியாலயத்திலும் முகமாலையில் இரு வாக்களிப்பு நிலையங்களிலும் ஈ.பி.டி.பி.யினர் கடும் ரகளையில் ஈடுபட்டதால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.
முகமாலையில் அமைந்திருந்த இரு வாக்களிப்பு நிலையங்களில், மக்கள் அடையாள அட்டையில்லாமல் வாக்களிப்பதாக ஈ.பி.டி.பி.யினர் ஆட்சேபித்து ரகளையில் ஈடுபட்டபோது, பொலிசார் தலையிட்டு நிலைமையைச் சீராக்கினர். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டபோது, யாரும் அடையாளஅட்டையின்றி அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். அதனால் வெளியிலிருந்து சத்தமிட்டபடி, சில மணிநேரத்தில் ஈ.பி.டி.பி.யினர் கலைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அராலி முருகமூர்த்தி வித்தியாலயத்தில் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்த மக்களை அணுகிய ஈ.பி.டி.பி.யினரும், ஆனந்தசங்கரி குழுவினரும், தாம் குறிப்பிடும் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தியுள்ளனர். பின்னர் அது வாக்குவாதமாக மாறியபோது, தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
அப்படி மிரட்டியபோது, வாக்களிக்க வந்திருந்த மக்கள், திடிரெனப் பாய்ந்து தாக்கியதில், ஈ.பி.டி.பி.உறுப்பினர் இருவர் அடிவாங்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டமெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், சில மணிநேரம் வாக்களிப்பு தடைப்பட்டதாகத் தெரியவருகிறது.
இதற்கிடையில், பருத்தித்துறை வாக்களிப்பு நிலையப் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு தகராறுகள் காரணமாக 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>