04-02-2004, 01:42 PM
அபத்தங்களை நம்பினால் அட்டூýழியங்களே மிஞ்சும்
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளினால், அந்த இயக்கத்திற்குள் உருவான தகராறையடுத்து கிழக்கில் தோன்றிய நிலைவரங்கள் இப்போது அவற்றின் 'அருவருக்கத்தக்க திருப்பத்தை" அடைந்திருக்கின்றன.
பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரும் கருணாவுக்கு நெருக்கமானவரெனக் கருதப்பட்டவருமான இராஜன் சத்தியமூýர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மட்டக்களப்பில் வாழும் வட மாகாணத்தவர்கள் சில கும்பல்களினால் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு கொண்டிýருக்கிறார்கள்.
மட்டக்களப்பில் இருந்து வட மாகாணத்தவர்கள் வெளியேறுவதற்கான காலக் கெடுவையும், சொத்துகள், உடைமைகள் எதையும் எடுத்துச் செல்லக்கூýடாது என்ற எச்சரிக்கையையும் இந்தக் கும்பல்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி மூýலமாக பகிரங்கமாக அறிவிப்புச் செய்யக் கூýடிýய அளவுக்கு துணிச்சலுடன் செயற்படக் கூýடிýயதாக இருக்கிறது என்பது மிகவும் விசனம் தரும் விடயமாகும்.
கருணாவின் செயற்பாடுகளின் விளைவாக மட்டக்களப்பில் தோன்றிய நிலைவரங்களின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரதேசவாதம் கிளப்பப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கருணாவின் வார்த்தைகளில் கூýறுவதானால் வன்னித் தலைமைத்துவம் கிழக்குப் போராளிகளைப் பாரபட்சமாக நடத்துவதாகவும் மேலாதிக்கம் செலுத்துவதாகவும் கருணா தரப்பினால் குற்றஞ் சாட்டப்பட்டது. இத்தரப்பினர் தங்களின் செயற்பாடுகளுக்கு கிழக்கு மக்கள் மத்தியில் 'நியாயம்" கற்பிப்பதற்காக பிரதேசவாதத்தைக் கிளப்ப ஆரம்பித்திருந்தார்கள் என்பதை ஆரம்பத்திலேயே வெகுவாக உணரக் கூýடிýயதாக இருந்தது.
பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றும் பேராசை கொண்ட சுயநலமிக்க அரசியல் வாதிகள் கிழக்கில் கடந்த காலத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பிய பல சந்தர்ப்பங்களைக் காணக்கூýடிýயதாக இருந்தது. ஆனால், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்த தமிழ்த் தாயகத்துக்காக உயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளை வழிநடத்திய ஒருவரினால் இத்தகைய கீழ்த்தனமான பிரதேசவாதம் கிளப்பப்பட்டிýருப்பதை தமிழ் மக்களினால் ஜீரணிக்கவே முடிýயாமல் இருக்கின்றது என்பது கசப்பானதொரு உண்மையே.
கடந்த இரு நாட்களாக வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் மட்டக்களப்பில் இருந்து 'பிரதேசவாதப் போர்வைக்குள் தங்களது நயவஞ்சகத்தனங்களை" மறைப்பதற்கு பிரயத்தனம் செய்யும் இக் கும்பல்களினால் அச்சுறுத்தப்பட்டு வெளியேறிக் கொண்டிýருக்கின்றார்கள். வாகனங்களில் வெளியேறிக் கொண்டிýருப்பவர்களின் வசமிருந்த சொற்ப உடமைகளும் வன்முறைக் கும்பல்களினால் இடைவழியில் மறிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அடாவடிýத்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூýடிýய திராணியுடைய ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மூýத்த அரசியல்வாதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடிýயாமல் முடக்கப்பட்டிýருக்கிறார்கள்.
இவையனைத்தும் மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், சட்டம் ஒழுங்கைப் பேனும் தரப்பினரின் கண் முன்னால், நடைபெற்றுக் கொண்டிýருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிýயதாகும். இராஜன் சத்தியமூýர்த்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் 'அதிர்ச்சியும் வேதனையும்" அடைந்து அறிக்கை விடுத்த நாட்டிýன் தலைவி மட்டக்களப்பில் இருந்து வட பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிýருக்கும் அடாவடிýத்தனம் குறித்து இன்னும் பகிரங்கமாக வாய் திறக்கவில்லை.
கருணா விவகாரத்தைத் தங்களின் கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான முனைப்பு தென்னிலங்கை அரசியல் முகாம்களிடையே தோன்றும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டேயிருந்தது. அந்த முனைப்புகளின் வெளிப்பாடுதான் மட்டக்களப்பு அசம்பாவிதங்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பினரின் பராமுகமா என்ற கேள்வியில் நியாயமில்லை என்று கூýறக் கூýடிýய மனத் தைரியம் எவருக்காவது இருக்கிறதா? மட்டக்களப்பின் இன்றைய துரதிர்ர்;டவசமான நிகழ்வுகள் தேர்தல் செயற்பாடுகளில் ஏற்படுத்தக் கூýடிýய பாரதூரமான தாக்கங்கள் குறித்து தமிழ் மக்களின் நலன்களில் இதய சுத்தியான அக்கறையுடையவர்கள் சகலருகமே பெரும் வேதனையடைந்திருக்கிறார்கள்.
சமாதான முயற்சிகளைக் கையாள்வதில் தென்னிலங்கையின் இரு பிரதான அரசியல் முகாம்களிடையே மூýண்ட இழுபறி இழுத்து வந்த இத் தேர்தலில் தமிழ் மக்கள் எந்த விதமாக தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை வெளிக்காட்டப் போகின்றார்கள் என்று தென்னிலங்கையும், சர்வதேச சமூýகமும் அவதானித்த வண்ணமிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவுடன் தேர்தல் களத்தில் நிற்கும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அளிக்கப் போகும் ஆணை தென்னிலங்கை அரசியலிலும் செல்வாக்கைத் தவிர்க்க முடிýயாத வகையில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தருணத்தில், தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பிற்கு அமோக வெற்றி வாய்ப்புக் கிடைக்காதிருப்பதை உறுதி செய்யக் கங்கணம் கட்டிý நிற்கும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளும் கிழக்கு நிகழ்வுகளின் பின்னணியில் தங்கள் கைவரிசையைக் காட்டிý நிற்கின்றன என்பதற்கு சான்று தேடிýக் கொண்டிýருப்பதைப் போன்ற முட்டாள் தனம் வேறு எதுவுமே இருக்க முடிýயாது.
தமிழ் மக்கள் உயிர்த் தியாகம் செய்து நடத்திய போராட்டத்தின் 'இடைக்கால அரசியல் பலாபலன்களை" அறுவடை செய்வதற்கான சூýழ்நிலையை உருவாக்குவதற்குச் சர்வதேச சமூýகத்தின் ' நியாயப10ர்வமான அங்கீகாரத்தை" பெறுவதற்கான வாய்ப்பாகக் கருதப்படும் இன்றைய தேர்தலின் 'வரலாற்றுத் தறுவாயை" தெளிவாகவே உணர்ந்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, கிழக்கு மக்கள் வீணான 'இடறல்களினால்" மனச் சஞ்சலமடையாமல் துணிச்சலுடன் தங்கள் அரசியல் உறுதிப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அணி திரண்டு ஜனநாயக ரீதியிலும் வெளிக்காட்டக் கூýடிýய ஒருமைப்பாட்டைக் குந்தகப்படுத்தும் நோக்கம் கொண்ட சக்திகளின் தூண்டுதலுடன் செயற்படும் பிரகிருதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
அபத்தங்களில் நாம் நம்பிக்கை வைத்தால், வேறு எதுவுமல்ல அட்டூýழியங்களே மிஞ்சும்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>