04-02-2004, 01:39 PM
மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றும் 18 மருத்துவ அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றம்
மிரட்டலை ஆட்சேபித்து மக்களும் ஊழியர்களும் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வட பகுதியைச் சேர்ந்த ஏழு வைத்திய நிபுணர்கள் உட்பட 18 மருத்துவ அதிகாரிகள் மட்டக்களப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மட்டக்களப்பை விட்டு வட பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டுமென கருணா குழுவினர் விடுத்த எச்சரிக்கையை அடுத்தே டாக்டர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
தொலைபேசி மூலம் இவர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களையடுத்தே இவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாக வைத்தியசாலையின் ஏனைய டாக்டர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் ருத்ரா, சத்திர சிகிச்சை நிபுணர் ஜீபரா, காது, மூக்கு, தொண்டை நிபுணர் சீவரெத்தினம், மனநல மருத்துவ நிபுணர் கணேசன், குழந்தை நல நிபுணர் திருமதி கணேசன் ஆகியோரும் வெளியேறியோரில் அடங்குவர்.
ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இருந்து பதில் உபவேந்தர் உட்பட யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ள நிலையிலேயே மருத்துவர்களும் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இதேவேளை, ஆஸ்பத்திரியிலிருந்து வடபகுதியைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களும், வைத்தியர்களும் வெளியேறக் காரணமான மிரட்டலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் டாக்டர்கள் மீண்டும் திரும்பி வந்து ஆஸ்பத்திரியில் கடமையாற்ற வேண்டுமெனக் கோரியும் நேற்று நண்பகல் 11.30 மணிமுதல் 12.30 மணிவரை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களது இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது.
வைத்திய நிபுணர்களதும், டாக்டர்களதும் வெளியேற்றம் ஆஸ்பத்திரி நடவடிக்கைகளையும், நோயாளர்களையும் பெரிதும் பாதிக்குமெனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் 17 க்கும் மேற்பட்ட சிங்கள டாக்டர்களும் இன்று வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கருணா குழுவின் மிரட்டல், மட்டக்களப்பு மக்களைப் பிரதேச ரீதியாக அந்நியப்படுத்தி எதிர்காலத்தில் அவர்களது சொந்தப் பகுதியிலேயே அவர்களது இருப்பைக் கேள்விக் குறியாக்கி விடுமெனக் கூறி நேற்று மாலை மட்டக்களப்பில் சில பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>