04-02-2004, 01:37 PM
வெளியேற மறுக்கும் வட பகுதியினருக்கு தொடர்ந்து தொலைபேசி மூýலம் மிரட்டல்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வட பகுதியைச்சேர்ந்தவர்கள் உடனடிýயாக வெளியேற வேண்டும் என்ற கருணா குழுவினரின் மிரட்டலையடுத்து வட பகுதி மக்கள் வெளியேறி வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நகர் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
மட்டக்களப்பிலிருந்து உடனடிýயாக வட பகுதி மக்கள் வெளியேற வேண்டுமென கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் கருணா குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
வர்த்தகர்கள், பொது மக்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள் என பெருமளவு வட பகுதி மக்களை வெளியேற்றியுள்ள கருணா குழுவினர், வெளியேற மறுக்கும் மக்களை தொலைபேசி மூýலமும், நேரிலும் சென்று மிரட்டிý வருவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
வட பகுதி மக்களின் இந்தப் பலவந்த வெளியேற்றத்தால் மட்டக்களப்பு நகர் நேற்று இரண்டாவது நாளாகவும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் நிலவி வருகின்றது.
நேற்று மட்டக்களப்பிற்குள்ளே உள்@ýர் பஸ்சேவைகளோ அல்லது மட்டக்களப்பிலிருந்து வெளிய10ர்களுக்கான பஸ் சேவைகளோ எதுவும் நடைபெறவில்லை. கடைகள், வர்த்தக நிலையங்கள் மூýடப்பட்டிýருந்ததுடன், அரச, தனியார் அலுவலகங்களும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, வட பகுதி மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு சந்தைப் பகுதியிலுள்ள வீடுகளுக்கு நேரில் சென்ற கருணா குழுவினர் அவர்களைக் கடுமையாக மிரட்டிýயதுடன், உடனடிýயாக வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்திருந்தனர்.
எனினும், நேற்று முன்தினம் வெளியேறியது போன்று நேற்று வட பகுதி மக்கள் பெருமளவில் வெளியேறாவிடிýனும், அவ்வாறு வெளியேறிச் சென்றவர்களை மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஆங்காங்கே வழிமறித்த கருணா குழுவினர், அவர்களை தீவிர சோதனைக்குட்படுத்தியுமுள்ளனர்.
வட பகுதி மக்கள் வெளியேறிய வீடுகள் பல புதன்கிழமை இரவு கருணா குழுவினரால் கொள்ளையடிýக்கப்பட்டதாகவும், வாகனங்கள் மூýலம் பெறுமதி மிக்க பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் மட்டக்களப்பு மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு மட்டு நகரில், யாழ்ப்பாணத்து வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்றை கருணா குழுவினர் தீயிட்டுக் கொளுத்த முற்பட்டதாகவும், ஆனாலும், பேக்கரிக்குப் பெரும் சேதம் ஏற்படவில்லையெனவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
செங்கலடிýப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ப10ட்டப்பட்டிýருந்த கடை ஒன்றை கருணா குழுவினர் தீயிட்டுக் கொளுத்திய போது, அப்பகுதி மக்கள் உடனடிýயாக விரைந்து வந்து தீயை அணைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று நடைபெறும் தேர்தலையொட்டிý மட்டக்களப்பில் என்றுமில்லாத அளவிற்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிýருந்தாலும், கருணா குழுவினர் வட பகுதிமக்களை மிரட்டுவதும், அவர்களை வீடு வாசல்களை விட்டு வெளியேற்றி வருவதும் தொடர்வதாக மட்டக்களப்பு மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நகரின் மூýலை முடுக்குகளிலும், முக்கிய பகுதிகளிலும், பிரதான வீதிகளிலும் பொலிஸாரும், படையினரும் பெருமளவில் நிறுத்தப்பட்டு சோதனை நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், வட பகுதியைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் மிரட்டல்கள் தொடர்ந்தும் விடுக்கப்பட்டு வருவதாகவும் இவை குறித்து படையினரோ, பொலிஸாரோ இதுவரை எதுவிதநடவடிýக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், பெருமளவு வட பகுதி வாக்காளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்கள் சிலர் விசனம் தெரிவித்த போதிலும், தங்களால் இதனை வெளிப்படையாக எதிர்க்க முடிýயாதிருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டு நகரில் கடந்த இரு நாட்களாக கறுப்பு உடை அணிந்த ஆயுத பாணிகள் பலர் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வலம் வருவதும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>