04-02-2004, 01:35 PM
கிழக்கு நிலைமை குறித்து விளக்கமளிப்பதற்காக கரிகாலன், கௌசல்யன் ஐரோப்பா பயணம்
கிழக்கு நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக விடுதலைப் புலிகளின் மூýத்த உறுப்பினர் கரிகாலன் மற்றும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை ஐரோப்பியப் பயணத்திற்காக வன்னியிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்வதாக கருணா அறிவித்ததையடுத்து, அவர் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது முதல் இதுவரை காலமும் கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும், அந்த நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்காகவே இவ்விருவரும் ஐரோப்பா செல்வதாக கூýறப்படுகிறது.
நோர்வே அனுசரணையாளர் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இலங்கை அரசின் சமாதானச் செயலகத்திற்கும் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வட பகுதி மக்களை உடனடிýயாக வெளியேறுமாறு கருணா குழுவினர் விடுத்துள்ள மிரட்டல்களும், அதனால் அங்கிருந்து வட பகுதி மக்களில் குறிப்பிட்ட அளவினர் வெளியேறியுள்ள நிலையிலும், ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனம் ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், ஐரோப்பாவிலிருந்து மட்டு. - அம்பாறை மாவட்டங்களுக்கு முன்னர் 3 கோடிý ரூýபாவிற்கும் மேற்பட்ட நிதியுதவியை தமிழ் மக்கள் வழங்கி வந்ததாகவும், தற்போதைய நிலையில் அதை அவர்கள் இடை நிறுத்தி விட்டதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், கரிகாலன் மற்றும் கௌசல்யன் ஆகியோர் ஐரோப்பிய பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>