04-02-2004, 01:27 PM
தேர்தலுக்கு முன்னதாகவே பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்த மட்டு.-அம்பாறை மாவட்டங்களில் தேர்தல் சுமூகமாக இடம்பெற்றுள்ளது
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 02 ஏப்பிரல் 2004, 18:53 ஈழம் ஸ
ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஒவ்வொரு 100 யார் இடைவெளியிலும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டதுடன், அடிதடி மற்றும் கலவரம் அடக்கும் பொலிசாரும் அங்கே பெருமளவில் கடமையிலிருந்ததாகத் தெரியவருகிறது.
மட்டு.-அம்பாறை தொகுதியில் அமைந்திருந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலோ அல்லது அதை அண்டிய பகுதிகளிலோ எந்தவொரு சிறிய அசம்பாவிதத்திலும் ஈடுபடும் எவரையும் நோக்கி உடனடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் கடுமையான உத்தரவை ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் வழங்கியிருந்ததால், அங்கு ஒழுங்கீனங்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கருணா குழுவினர் தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் குழப்பங்களை உருவாக்கியதால், முஸ்லிம் மக்களே பெருமளவில் வாக்களித்ததாகவும், தமிழ் வாக்காளர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் எதுவித அசம்பாவிதங்களுமின்றி தேர்தல் வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.
மக்கள் இம்முறை மிகவும் ஆர்வத்தோடு வாக்களித்ததாகவும், கொழும்பில் அமைந்திருந்த ஒரு வாக்களிப்பு நிலையத்தில், நிலையத்தைத் திறந்தவுடன், முதல் அரைமணி நேரத்திற்குள் 182 வாக்காளர்கள் முண்டியடித்துக்கொண்டு வாக்களித்ததை அவதானித்ததாகவும் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கருத்துக் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், பேராசிரியர் ஐP.எல்.பீரிஸ் தெரிவித்துள்ள கருத்தில், ஐ.தே.முன்னணி மீண்டும் பலமான ஒரு அரசை அமைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை என்றும், மக்கள் தங்களது பலமான ஆதரவை மீண்டும் தமது கட்சிக்கு வழங்கியுள்ளார்கள் என்று தான் முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>