04-02-2004, 12:57 PM
இலங்கைத் தேர்தல் : மதியம் வரை 62 விழுக்காடு பதிவு!
வெள்ளி, 2 ஏப்ரல் 2004
இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று நடைபெற்றத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் மதியம் வரை 62 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 வாக்குச் சாவடிகளிலும், கிழக்கு வடமொராச்சியில் உள்ள 32 வாக்குச் சாவடிகளிலும் இந்த அளவிற்கு வாக்குப் பதிவு நடந்துள்ளதாக புலிகள் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியுள்ளது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டை பரிச்சான், மகேந்திரபுரா மற்றும் முட்டூர் பகுதிகளில் இன்று மதியத்திற்குள் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகிவிட்டதாக தேர்தல் அதிகாரி காமினி ரோட்ரிகோ கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சுண்ணாகம், மல்லாகம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணி வரை 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளதென செய்திகள் கூறுகின்றன.
கிழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததென செய்திகள் கூறுகின்றன.
நன்றி - வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>