04-02-2004, 12:54 PM
அமைதியாய் நடந்து முடிந்த இலங்கை தேர்தல்: 75 சதவீத வாக்குப் பதிவு
கொழும்பு:
பலத்த பாதுகாப்புக்கு இடையே, எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி இலங்கை நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.
காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் நடந்த மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலையொட்டி இலங்கை முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பல இடங்களில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டளித்தனர்.
225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடும் கட்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, அதிபர் சந்திகாஜனதா விமுக்தி பெரமுனான் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவையே மிக முக்கியமானவை.
மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த 6,024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு இலங்கையில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
யாழ்பாணம் உள்ளிட்ட வட இலங்கையில் புலிகள் மற்றும் ராணுவம் வசம் உள்ள பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது. வாக்களிப்பதற்காக நேற்றிரவில் இருந்தே வன்னி பகுதியைச் சேர்ந்த சுமார் 20,000 வாக்காளர்கள் இந்த எல்லைப் பகுதியில் குவிந்துவிட்டனர்.
மேலும் இன்று காலையில் தங்களது பஸ்கள் மூலம் வாக்காளர்களை புலிகள் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்தனர். இப் பகுதியில் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டுப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பில் வாக்களித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிருபர்களிடம் பேசுகையில், அமைதிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்றார். அதிபர் சந்திரிகா கம்பகா மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
முன்னதாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பேசிய சந்திரிகா, தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளேன என்றார்.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளையே முடிவுகளும் தெரிந்துவிடும்.
இத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. இதனால் சிறு கட்சிகளின் ஆதரவுடன் தான் அடுத்த அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் தேசியக் கூட்டணியும் அடுத்த ஆட்சி அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
நன்றி - தட்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>