04-02-2004, 11:08 AM
[scroll:357ee01f71]<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_01.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_03.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_04.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_05.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_02.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_07.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_08.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_09.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/Omanthai_voting_10.jpg' border='0' alt='user posted image'>
Tamilnet and puthinam.com[/scroll:357ee01f71]
வவுனியா ஓமந்தைப் பகுதியில் தேர்தல் திருவிழா
வன்னித் தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு எதுவித பிரச்சனைகளும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இராணுவக் கட்டுபாடற்ற பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் புளியங்குளத்திலிருந்து வாகனங்களில் ஏற்றி வரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பல்லாயிரக்கணக்கில் திரண்டுவந்த வாக்காளர்கள் முண்டியத்துக்கொண்டு வாக்குகளைப் போட்டனர். சர்வதேச கண்காணிப்பாளர்கள் பெருமளவில் ஆஐராகி இருந்தனர்.
இராணுவத்தினர் எதுவித கெடுபிடிகளையும் மேற்கொள்ளவில்லை. பொலிசார், இராணுவச் சோதனை சாவடியிலிருந்து பேரூந்துகளில் வாக்காளர்களுடன் இணைந்து வந்து தடைகளினை நீக்கி வாக்களிக்க அனுமதித்தனர். எனினும் சில இடங்களில் வாக்களிக்கும் போது பொலிசார் வாக்களித்ததை பார்த்துக்கொண்டே இருந்தனர்.
ஓமந்தைப் பகுதியில் ஈ.பி.டி.பி. யினர் தமது வேட்பாளர்களின் விபரம் அடங்கிய துண்டுப்பிரசுரத்தினை வழங்கினார்கள் என்று கண்கானிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பவ்ரல் அமைப்பினர் தெரிவித்தனர். அத்துடன் ஈ.பி.டி.பி. யின் உறுப்பினர்கள் வாக்களிக்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கள்ள வாக்கு போட வந்துள்ளனர் என்று எல்லோரிடமும் தெரிவித்தனர்.
எனினும், அவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் வந்திருப்பதாக சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியா அரச அதிபரிடம் இது தொடர்பாக கேட்டபோது இதுவரை எந்தவிதமா பிரச்சனைகளும் இன்றி தேர்தல் மிகவும் நேர்த்தியாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க வாக்களிக்க வாக்களிக்க வந்தவர்களில் இருவர், புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புளியங்குளம் பகுதியிலும், ஓமந்தைப் பகுதியிலும் திருவிழா போன்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டனர்.
puthinam.com
Tamilnet and puthinam.com[/scroll:357ee01f71]வவுனியா ஓமந்தைப் பகுதியில் தேர்தல் திருவிழா

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>