04-02-2004, 07:49 AM
மொட்டைத் தலையும் முழங்காலும்...!
~வன்னித்தலைமை, மட்டக்களப்பு-அம்பாறை போராளிகளுக்கு சமஅளவு அதிகாரங்களையும் பதவிகளையும் வழங்கவில்லை, கிழக்கிலங்கை பின்தங்கியிருப்பதற்கு வன்னித் தலைமையின் பாராமுகமே காரணம்| என்பதே கருணா தனது முடிவுக்காக முன்வைத்த குற்றச்சாட்டு.
மீண்டும் வன்னித் தலைமையுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால், இதுகுறித்து வன்னித்தலைமை என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்? - இது செய்தியாளரின் கேள்வி.
~உளவுத்துறை பொட்டம்மானையும், நிதித்துறை புகழேந்தியையும், காவற்துறை நடேசனையும் நீக்கி விடும்படி கூறுங்கள், நான் தலைவருடன் சமரசம் செய்து கொள்கிறேன்| - இது கருணா.
இந்த மூவரையும் நீக்குவதன் மூலம், கருணா கிளப்பியுள்ள கிழக்கிலங்கையின் பிரதேசவாதப் பிரச்சனை தீருவதற்கு எந்த வாய்ப்புமே இல்லை என்று பார்க்கும் பொழுது, கருணா எங்கேயோ சொதப்பி விட்டார் என்று இலகுவாகப் புரிந்து விடும்.
விடுதலைப் புலிகளின் தலைமையிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்த சில மணி நேரத்தில் வழங்கிய செவ்வியில், கருணா முன்வைத்த குற்றச்சாட்டும், அதற்கான நிவர்த்தி நிலைப்பாடும் இவை மட்டுமே.
பின்னர் சுதாரித்துக்கொண்டு, அதையும் இதையும் அடுத்தடுத்துச் சொன்னாலும், அந்த முதல் நாளில் அவர் கொடுத்த காரணம், அவரது நம்பகத்தன்மையை நலிவடைய வைத்துவிட்டது.
அடித்து முந்திக்கொண்டு நோர்வேயும், ஐப்பானும் தன்னிடம் ஓடிவந்து மடிப்பிச்சை கேட்கும், இறங்கிவந்து இணங்கிக்கொள் என்று தன்னிடம் கோரும், வன்னித் தலைமையை ஓர் இணக்கப்பாட்டிற்கு வரும்படி அழுத்தம் கொடுக்கும், இதற்கிடையில் கிழக்கிலங்கைத் தமிழர்கள் தன்னை கிழக்கின் விடுதலை நாயகனாகக் கொண்டாடுவார்கள் என்றெல்லாம் கருணா கனவுகண்டு கொண்டிருக்க, நடந்ததென்னவோ எதிர்மாறான நிகழ்வுகள் தான்.
நோர்வேயும் ஐப்பானும் ஓடிவந்தது என்னவோ உண்மைதான், கருணாவும் தனது திட்டப்படிதான் எல்லாமே நகர்வதாக அனுமானித்ததும் உண்மைதான், ஆனால், வந்தவர்கள் வன்னித் தலைமையைச் சந்தித்துவிட்டு, சத்தமின்றித் திரும்பியபோதுதான் கருணாவுக்கு நிஐங்கள் வெளிக்க ஆரம்பித்தன.
கருணா எதிர்பார்த்த திசையில் காய்கள் நகரவில்லை என்பதால், இனி காய்களை தானே நகர்த்த வேண்டிய கட்டாய நிலை. அந்த முயற்சியில் தான், தற்போது பத்திரிகை எரிப்புக்கள், கடையடைப்புக்கள், கைதுகள், வேட்பாளர் சந்திப்புக்கள் எல்லாமே. இருந்தாலும் இதுஹ
~நேத்துப் பிறந்த குரங்கு குட்டிக்கரணம் போட்டுக் காட்டினமாதிரி| தானும் தலைமைக்கும் புத்தி சொல்லப் போய் தன்னிலை கெட்டுப்போய், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறல், திண்டாட்டம்!
உண்மைகள் இப்போது அடுக்கடுக்காய் வெளிவர ஆரம்பித்துள்ளன.
- கடந்த ஐந்து வருடங்களாக, கருணா தனக்கான தனித் தலைமையில் குறிவைத்து செயற்பட்டமை
- தனது குடும்பத்தை மலேசிய நாட்டில் குடிவைத்ததோடு, தனக்கென பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்தமை
- தலைவரின் உத்தரவில் உள்ளெடுக்கப்பட்ட பெருந்தொகை ஆயுத தளபாடங்களை தனக்கு மட்டுமே தெரிந்த இடங்களில் மறைத்து வைத்தமை
- தலைமைக்குத் தெரியாமல், தனக்கென ஓர் உளவுப்படை வைத்திருந்தமை
- தலைமைக்குத் தெரியாமல், தனக்கென ஓர் உயர்பாதுகாப்புப்படையை உருவாக்கியமை
- தலைமைக்குத் தெரியாமல், வெளிநாடுகளில் முதலீடு செய்தமை
- தலைமையின் முடிவின்றி, தன்னிச்சையாக முடிவுகள் எடுத்தமை
- அமைப்பின் துறைகளுக்கான பிரத்தியேக பொறுப்பாளர்களோடு கலந்தாலோசிக்காது செயற்பட்டு வந்தமை
- தனது நடவடிக்கைகளை மேலிடத்திற்கு அறிவிக்க மறுத்தமை
- தனது நேரடி நிர்வாகத்தின் கீழ், தன்னைப் பலப்படுத்தும் நோக்குடன் தனியாக ஒரு பத்திரிகை நடாத்தியமை
- அமைப்பிலிருந்த தனது சகோதரர்கள் இருவரை, தனது இரகசியத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியமை
- இன்னும் பல பண மோசடிகள், காதல் லீலைகள், இரகசியத் தொடர்புகள் மற்றும் மிரட்டல்கள், வன்முறைகள் என்று இப்பட்டியல் நீண்டு செல்லும்.
ஆக, கருணா சுயநல பாதுகாப்புக்காக பிரதேசவாதத்தைத் து}க்கியிராவிட்டால், இப்போது மட்டக்களப்பு பிரதேசமே கதிகலங்கிப் போயிருப்பது குறித்து அவசியம் கவலைப்பட்டிருப்பார். ஆனால், மட்டக்களப்பு மக்கள் கதிகலங்கினாலென்ன, கண்ணீர் விட்டாலென்ன, தமிழர் வியாபாரங்கள் பாழாய்ப் போனாலென்ன, பறிபோனாலென்ன, யாருக்கு அவர்களைப் பற்றிக் கவலை? கருணா பிரதேசவாதம் மூலம் தன்னைக் காத்துக் கொள்ள முயன்றாரேயொழிய கிழக்கையல்ல. இதை இன்னும் ஒரு சிறுதொகை கிழக்கிலங்கை மக்கள் உணர்ந்துகொள்ளாது இருப்பது அதிசயமாக இருக்கிறது.
கிழக்கைப்பற்றிக் கவலைப்படாது, வடக்கின் விடுதலையை வென்றெடுப்பதாக இருந்தால், வடக்கு மட்டும் தனிஈழமாக மலர்ந்து, இருபது வருடத்துக்கு முன்னரே இரண்டாவது சிங்கப்பூராக மாறியிருக்கும். கிழக்கும் இணைந்த தமிழீழம் தான் தமிழரின் தாயகம் என்று உறுதியாக வன்னித் தலைமை இருந்ததால் மட்டுமே, இதுவரை இந்தக் கடுமையான போராட்டம். வடக்கை மட்டும் வென்றெடுப்பதே வன்னித் தலைமையின் நோக்கமாக இருந்திருந்தால், கருணா என்ற ஒரு தளபதியை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக்கூட வாய்ப்பிருந்திருக்காது. கருணா என்ற முரளீதரன், புலிகள் அமைப்பில் பால்குடியாக இருந்தபோதே, தமிழீழப் பிரச்சனை தீர்ந்து போயிருக்கும். ஆனால், கிழக்கும் தேவை, அதுவும் வடக்கின் சமஅளவு அதிகாரங்கள் படிமானங்களோடு ஒன்றாகத் தரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்த ஒருவர், ஈழத் தமிழரின் வரலாற்றிலேயே, வே.பிரபாகரன் ஒருவர் தான்.
1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற காலம் முதல், வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒன்றான தமிழர் தாயகம் என்று உரிமை கொண்டாடுவதில் தேர்தல் காலத்தில் பலர் குளிர்காய்ந்திருந்தாலும், வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழர் தாயகம் என்பதை, வெற்றியின் போதும் தோல்வியின் போதும், ஏன், இந்திய இராணுவம் கொடுரப் போர் புரிந்து, கிழக்கில் வரதராஐப்பெருமாளை முதலமைச்சராக பலவந்தமாக நியமித்து, வடக்கும் கிழக்கும் இரு மாகாணங்களாக ஒரு முதலமைச்சரின் கீழ் இயங்கும் என்று றீல் விட்டபோதும் கூட, வன்னித் தலைமை அடர்ந்த காட்டுக்குள் இருந்து, வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு பிரதேசமே தமிழர் தாயகமாக அமையமுடியும் என்று ஒற்றைக்குரலில் hPங்காரமிட்டது.
அப்போதெல்லாம், குலைக்காமல் வாலையாட்டிய சின்னன்கள், பதவியையும் புகழையும் பணத்தையும் சுகத்தையும் கண்டதும், நச்சுப்பாம்பாக உருமாறியிருப்பது சுயநலம் தவிர வேறெதுவுமில்லை. பிரதேசவாதம் என்ற மொட்டைத் தலைக்கும், பொட்டம்மான் என்ற முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது, நகைப்பிற்கிடமானது.
பொட்டம்மான் நிர்வகிக்கும் உளவுத்துறை, வடக்கு கிழக்கு குறித்த பிரதேசவாரியான எந்த முடிவையும் எடுப்பதில் பங்கெடுக்கப் போவதில்லை, பங்கெடுத்திருக்கவும் வாய்ப்பில்லை. நீதித்துறையும், நிதித்துறையும், சட்டத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட வடக்கு கிழக்கை பிரிப்பதா இணைப்பதா என்ற வாதத்திலும் பிரதிவாதத்திலும் கலந்து கொண்டிருக்க வாய்ப்பேதுமில்லை. ஆக, கருணாவுக்கு ஆறாவது அறிவு, மீதி ஐந்தறிவின் வேகத்தில் செயற்பட மறுத்திருக்கிறது என்பதே நிஐம்.
எல்லாம் இப்போது நன்றாகப் புரிந்து விட்டது. பிரதேசவாதம் பொய், போராளிகளைக் கேட்டது பொய், கிழக்கை விட வடக்கை அதிகம் அபிவிருத்தி செய்ததென்ற கோசம் பொய், கிழக்கின் தனியான விடுதலை என்ற பிரச்சாரமும் பொய். பொய்களுக்கு ஆயுள் சிறிது என்பதை முரளீதரன் புரியாவிட்டாலும், தமிழ் மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள்.
இறுதியாக முரளீதரனுக்கு விரிந்திருக்கும் இரு வாய்ப்புக்கள், இரண்டே இரண்டு வாய்ப்புக்கள், தெளிவாகத் தெரிகின்றன:
1) பொது மன்னிப்பை ஏற்று, சரணடைந்து, சாவைத் தவிர்த்து, சரித்திரம் படைத்து, தமிழினத்திற்கு நிரந்தரப் புகழ் சேர்ப்பது.
2) நோர்வேயின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஈழப் போராட்டத்தை முற்றாகத் துறந்து, தனது மனைவி குழந்தைகளுடன் குடித்தனம் நடாத்துவது.
இந்த இரு வாய்ப்புக்களுக்கும் கூட, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் காலஅவகாசம் மிக சொற்பமே. ஏப்ரல் 2, தேர்தல் நாள். ~தேர்தல் செல்லுபடியானது, பாராளுமன்றம் அமையும்| என்ற முடிவு அதைத் தொடரும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம். அதுவரைதான் அவகாசம் இருக்கிறது முரளிக்கு. இரண்டில் ஒரு முடிவை விரைவாக எடுத்து, விடைபெற வினயமாய் வேண்டுகிறோம்.
ஏனைய எல்லா முயற்சிகளுமே, தமிழினத்தின் நிரந்தரத் துரோகி என்ற பட்டத்துடன், ஈழத்தமிழர் வரலாற்றில் இன்னுமொரு ஈனப்பிறவியாகப் பதிவு செய்யப்படும் கோரநிலைக்கே கோலமிடும்.
அன்புடன்,
காவலு}ர் கவிதன்
ரொறன்ரோ, கனடா
நன்றி - தமிழ் நாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>