04-02-2004, 07:37 AM
தேர்தல் பிரசாரங்களில் புலிகளுக்கு எதிராகப் பேசாதீர் தனது கட்சியினருக்கு ஜெயலலிதா கடும் உத்தரவு
இந்திய பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கும் நிலையில், பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழக தொகுதிகளில் போட்டியிடும் தனது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களோ அவர்களுக்கு ஆதரவாக மேடைகளில் பேசும் முக்கியஸ்தர்களோ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருப்பதாக சென்னையில் இருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக 'பொடா" சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கும் கூடுதலான காலம் சிறையில் அடைக்கப்பட்டு இப்போது வெளியே வந்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றும் தேர்தல் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்கின்றனர்.
சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியும் கலைஞர் மு.கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க.வும் கூட்டாகச் சேர்ந்தே லோகசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த காலத்தில் ராஜீவ் காந்தி கொலையுடன் திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சி கூட, தேர்தல் கூட்டுக் காரணமாக, அந்த விமர்சனங்களையெல்லாம் பழைய கதையாக மறந்துவிட்ட நிலையில், தனது கட்சியினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசுவதனால், தேர்தலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை ஜெயலலிதா வெகுவாக உணர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள தனது வாசஸ்தலத்துக்கு அண்ணா தி.மு.க. வின் மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கீழ்மட்டக் கட்சித் தொண்டர்கள் கூட, வீணாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரைகளை ஆற்றாதிருப்பதை உறுதி செய்யுமாறு அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக சென்னைத் தகவல் ஒன்று தெரிவித்திருக்கிறது.
வைகோவின் பிரசாரங்களினால் காங்கிரஸ் கூட்டணிப் பக்கம் பெருமளவில் மக்கள் சாய்வதால் அச்சமடைந்திருக்கும் ஜெயலலிதா, தனது எதிரியான ரஜினிகாந்திடம் கூட்டத் தூது அனுப்பி, பழைய பகைமையை மறந்து செயற்படுவோம் என்று கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>