04-01-2004, 11:05 PM
<span style='color:red'>மட்டு நிலைமைகள் தொடர்பாக நான்கு அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை
மட்டக்களப்பு நிலைமைகள் தொடர்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், குழந்தைகள் நலனுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம், உலக உணவுத் திட்டம் ஆகிய நான்கு அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றன.
இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் வாழவும், சொத்துக்களைக் கொண்டிருக்கவும் இலங்கை மக்களுக்கு உரிமையுள்ளது எனத் தெரிவித்திருக்கும் இவ்வறிக்கை, உலக மனித உரிமைப் பிரகடனம் இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்துகிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
மக்களின்; உயிருக்கும் உடமைக்கும் அச்சமூட்டுகின்ற அல்லது பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கையை எவரும் மேற்கொள்ளமலிருக்க வேண்டுமாறு அனைத்துத் தரப்பிரையும் ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு அமைப்புகளும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இடம் பெயர்ந்த 3 இலட்சத்து 56 ஆயிரம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில், மட்டக்களப்பில் வாழும் யாழ்ப்பான மக்கள் இடம் பெயருமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து இவ்வமைப்புக்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.
அத்துடன், சகல தரப்பினரும் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை சம்பந்தப்பட்ட சகலரையும் வலியுறுத்தியுள்ளது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>