04-01-2004, 05:11 PM
<span style='color:red'>மணிராசன்குள முகாம் குறித்து ஐனாதிபதி இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் கொழும்புப் பத்திரிகை
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டவிரோதமாக முகாம் ஒன்றினை அமைத்திருப்பதாக குற்றம்சாட்டிய சிறீலங்கா ஐனாதிபதியும், அவரது கட்சி அங்கத்தவர்களும் இன்று மௌனம் சாதித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலையின் மணிராசன்குளப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் சட்டவிரோதமாக முகாம் ஒன்றினை அமைத்திருப்பதாகவும், இதனை சிறீலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்துமாறும் அன்;றைய படைத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதமளவில் ஐனாதிபதி கட்டளையிட்டதோடு, ஐக்கிய தேசியக் கட்சி சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விடுதலைப் புலிகளிற்கு தாரை வார்த்துக் கொடுப்பதாகவும்; தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார்.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினால் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்த படைத்துறை அமைச்சை பறித்தெடுத்தையும் சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆங்கிலப் பத்திரிகை, விடுதலைப் புலிகளின் மணிராசன்குளம் முகாமை அகற்றுவது தொடர்பில் ஐனாபதி இன்று மௌனம் சாதிப்பது ஏன்? எனக் கேள்வியெழுப்பியுள்ளது.
முஸ்லிம் பள்ளிவாசலிற்கு அண்மையில் விடுதலைப் புலிகளின் மணிராசன்குள முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அன்று கூறிவந்த ஐனாதிபதியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிடும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் இச்சம்பவம் தொடர்பாக அண்மையில் கேட்கப்பட்டபோதும், இதுதொடர்பாக அவரும் எதுவித கருத்துக்களையும் கூறமறுத்து விட்டதாகவும் இந்த ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>