04-01-2004, 04:44 PM
<span style='color:red'>சங்கரி தனது செவ்வியில், ஈழத் தமிழர்களை 'கிணற்றுத் தவளைகள்\" என்று குறிப்பிட்டுள்ளார்
தேர்தல் நடைமுறைகள், தற்போதைய நிலைமைகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் பற்றிக் கேட்கப்பட்டபோதே, ஆனந்தசங்கரி இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் நான்கு அல்லது ஐந்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள், இடையிடையே வந்து அடிப்படை மனித உரிமைகள் பற்றிப் பேசிவிட்டுச் செல்வார்களே தவிர, அவர்களுக்கு அங்கு நடைபெறும் எந்த ஒரு பிரச்சனையும் விளங்குவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மக்களின் வாக்குரிமை இன்னும் சரியான முறையில் வழங்கப்படவில்லை. இம்முறை அவர்கள் வாக்குகளை அளித்தாலும், அங்கு என்ன நடக்கிறது, யார் வேட்பாளர்கள், தேர்தல் நடைமுறை என்ன போன்ற எந்த விடயங்களும் தெரியாமல், கிணற்றுத் தவளைகள் போல், முட்டாள்களாகவே இம்முறை அவர்கள் வாக்களிக்கப் போகிறார்கள். தாங்கள் அளிக்கும் வாக்குகள் பற்றிய விபரங்கள் கூட அவர்களுக்குத் தெரியாது.
வாக்களிப்பது உட்பட, அடிப்படை மனித உரிமைகளுக்குக் கீழே நிறைய விடயம் இருக்கிறது. இதை யாழ். மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. வன்னியில் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் வாழும் மக்களின் நிலையும் இதுதான். அவர்களுக்கு யார்யார் எந்தக் கட்சியில் கேட்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. இதுவெல்லாம் தேர்தலா? இந்தத் தேர்தல் செல்லுபடியானதல்ல என்றும் அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார் என்று தெரியவருகிறது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>