04-01-2004, 02:56 PM
<span style='color:red'>அம்மான் என ஏன் இன்னும் அழைக்கிறீர்?
தமிழலை நிழற்பதிப்பு தனது மின்னஞ்சல் முகவரியை வழங்கி ஒரு நாள் பூர்த்தியாக முன்னரே 106 மின்னஞ்சல்கள் எமக்குக் கிடைத்தன. இவற்றில் 105 மின்னஞ்சல்கள் தமிழலையின் நிழற்பதிப்பை வரவேற்பனவாக இருந்தன. பலரும் பலவிதமான ஆதங்கங்களை வெளியிட்டிருந்தனர். உண்மையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிய எமது கைபட பதில் எழுத வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்குரிய வாய்ப்பு இப்போது எமக்கில்லை. ஒவ்வொன்றையும் வாசித்தோம். விரைவில் எங்களுக்கு வாய்ப்பு வரும்போது உங்கள் உணர்வுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றி செலுத்துவோம்.
பலர் நாம் கருணா அம்மான் என்று மரியாதைத் தொனியில் இன்னும் அழைப்பதாகவும் விசனம் தெரிவித்திருந்தார்கள்.
எமது பாதுகாப்பு பற்றியும் பலர் கவலையடைந்திருந்தனர்.
உண்மை கொல்லப்படும்போது அதற்காகக் குரல் கொடுப்பது எமது பாதுகாப்பை விடவும் முக்கியமானது. இந்த முடிவோடு தான் நிழற்பதிப்பு என்று பெயரிட்டோம். நிழலாய்த் தொடர்வோம்!
யாழ்ப்பாணப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று கூறிப் பல குடும்பங்களைக் கலைத்துச் சூறையாடியபோது நடந்த அவலங்கள் சொல்லில் அடங்கா. இது கண்டு எமது மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். இந்த அவலங்களை வரிக்கு வரியாக விபரித்து எழுதுவதில்லை என்று நாம் நேற்று முடிவெடுத்தோம். எமது நாட்குறிப்புகளில் இவற்றைக் குறித்துக்கொள்கிறோம். ஏனென்றால் அந்த அவலங்களை விலாவாரியாக விபரிப்பதன் மூலம் எமது இனத்திற்கிடையே பிளவுகள் ஏற்படுவதற்கு நாமும் எம்மை அறியாமல் துணைபோய்விடக்கூடாது. இதைத்தானே இந்த முறைதவறிய கூட்டமும் சிங்கள புலனாய்வுத் துறையும் விரும்புகிறது.
இன்டர்நெட் கபேக்களில் வெருட்டல் விடுவதால் எமது செயற்பாட்டை நிறுத்திவிடலாம் என்று கருணா குழுவினர் கனவு காண்கிறார்கள். தாங்கள் நினைத்தால் இன்டர்நெட்டையே மூடிவிடுவார்களாம்! யாருக்குப் பூச்சாண்டி காட்டுகிறார்கள்! இரண்டு வருடங்களுக்குள் இயக்கத்தில் சேர்ந்து நேற்றுத் திடீர்ப் பொறுப்பாளராக மாறிய ஒருவரின் வெருட்டல் இது. உண்மையான போராட்டத்தில் நின்று அறியாத இவருக்கு போராட்ட மரபு எங்கே தெரியப்போகிறது.
இவர்களின் துப்பாக்கிகளில் இருந்து வெளிவரும் தோட்டாக்களை விடவும் எமது எழுத்துக்கள் பலம் வாய்ந்தவை என்பதை இவர்கள் அறியார்.
உணர்ச்சிவசப்பட்டு அறிவு நிலை தவறி மாபெரும் தவறுகளை இழைக்கும் கூட்டத்தின் அடாவடித்தனங்கள் பல.
ஒரு சிறிய உள்ளூர் வீட்டுமுகாம் ஒன்றின் கதவில் அம்மானுக்கு விசர் நாய் கடித்துவிட்டது என்று கிறுக்கப்பட்டிருந்ததைக்கண்ட இன்னும் ஒரு திடீர் பொறுப்பாளர் அந்த வீட்டில் இருந்த இருபதுக்கு மேற்பட்ட இளைய போராளிகளை வீட்டு வாசலில் ஒன்று திரட்டி நாய்கள் குலைப்பது போல் குரல் கிழியும் வரை குரைக்கவேண்டும் என்று ஒரு புதுவிதமான தண்டனையை வழங்கியிருக்கிறார்.
கதைக்க முடியாத நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற இளம் போராளி ஒருவன் சொன்ன வார்த்தைகள் எம்மைச் சிந்திக்கவைத்தன. அண்ணே, நான் குரைத்தபோது தான் வாழ்க்கையில் முதல் முதலாகச் சிந்திக்கத்தொடங்கினேன்!
இனி, போகிற வழிச் சுவர்களில் எல்லாம் எழுதித் தான் போவானாம்!
இவை போன்ற பல சம்பவங்கள்! எல்லாவற்றையும் இணையத்தில் எழுதுவதை விட எமது நாட்குறிப்புகளிலே குறித்துக்கொள்கிறோம்.
இவற்றையெல்லாம் எழுதுவதற்காக உண்மையில் நாம் வெட்கப்படுகிறோம்!
எம் இனிய தேனாட்டு மக்களே! எமது விடுதலைப்போராட்டம் பலவிதமான எதிரிப்படைகளைச் சந்தித்திருக்கிறது. நாம் கண்ட படைகளின் விதங்களோ பல. இப்போது நாம் இங்கே சந்தித்துவருவதும் இதுபோன்ற ஒரு படையை உருவாக்க முயலும் கூட்டத்தைத் தான்! </span>
நன்றி தமிழலை நிழற் பதிப்பு...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>