04-01-2004, 02:49 PM
<span style='color:red'>சத்தியமூர்த்தி கொலைக்கு உதவியர் யார்?
கருணா அம்மானின் நெருங்கிய சகாவான சத்தியமூர்த்தி கொலை தொடர்பாக கருணா அம்மான் குழுவினர் மத்தியில் பலத்த சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளது.
சத்தியமூர்த்திக்கு ஆபத்து ஏதும் நேரலாம் என்ற எதிர்பார்ப்பில் கருணா குழுவினரால் அவருக்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர் கொல்லப்பட்ட திருமலை வீதி வீட்டைச் சுற்றியுள்ள வீதிகள் பலத்த கண்காணிப்பிற்கும் காவலுக்கும் உட்பட்டிருந்தது.
மேலும் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணாவோடு இணைந்து நிற்பவர்கள் மீது விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து சத்தியமூர்த்தியின் பாதுகாப்பு மேலும் இறுக்கப்பட்டு, பாதுகாப்புப் பொறுப்பு கருணாவின் நெருங்கிய சகா ஒருவரின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.
இத்தனை பாதுகாப்பு முயற்சிகளுக்கு மத்தியிலும் இத்தாக்குதல் நடந்திருப்பது கருணா தரப்பை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இக்கொலையும் தாக்குதல் நடத்தியிருப்பவர்கள் தப்பிச் சென்றிருப்பதும் இத்தாக்குதல் கருணா குழுவினர் சிலரின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்ற கருணாவின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்தவர்களில் சந்தேகத்திற்குரியோர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பயம் கருணா குழுவினர் மத்தியில் ஏற்பட்டுளளது.
-------------------------------------------
யாழ்ப்பாணமே எங்களை மன்னிப்பாயா?
கருணா அம்மானே,
ஏதோ ஒரு காலத்தில தளபதியாய் இருந்தீங்கள் என்ற அடிப்படையில் இருந்த கடைசி நம்பிக்கையையும் நேற்றோடு சாகடித்து விட்டீங்கள்.
யாழ்ப்பாண மக்களை வெளியேற்றும் உங்கள் அடாவடித்தனம் மட்டுநகரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
பெருமளவில் வர்த்தகர்களும் மக்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
மட்டுநகரை விட்டு கொழும்பு நோக்கி செல்லும் அவலத்தை எப்படி எழுதுவது?
யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுநகர் அந்நியமாயும் கொழும்பு பாதுகாப்பாயும் மாறிப்போன வரலாற்றின் வேடிக்கையைப் பாருங்கள்.
ஒரு சிங்கள அரசாங்கமோ, ஒரு சிங்களத் இனவாதத் தளபதியோ செய்ய நினைக்காத ஒரு கேவலத்தை நீங்கள் செய்து முடித்திருக்கிறீங்கள்.
இதுதான் நீங்கள் இருபது வருடமாக போராடி மட்டுநகருக்கு தேடித் தந்த கௌரவமா?
சிங்கள தளபதிகள் எம் மக்களையே கொன்றார்கள். நீங்கள் எமது இனத்தின் ஆன்மாவையே கொலை செய்து விட்டீர்கள்.
ஒரு போர்த் தளபதியாய் இருந்த நீங்கள் இன்று அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்க வேண்டிளவிற்கு கீழிறங்கிப் போனதை நினைத்துப் பார்த்தீங்களா?
கரும்புலிகள் தம் உயிர்கொடுத்து உங்களைப் பாதுகாத்த காலமொன்றிருந்தது. இன்று மக்கள் மத்தியில் இருக்க முடியாது நீங்கள் காடுகளில் மறைந்து பாதுகாப்பு தேடவேண்டிய அவலத்தை ஒரு கணம் நினைத்தீங்களா?
வரலாறு என்றும் உங்களை மன்னிக்காது. ஏதேதோ விடுதலை பற்றிய புத்தகம் எல்லாம் படித்ததாக சொன்னீங்களே. அங்கெல்லாம் உங்களை போன்ற அசிங்கங்கள் பற்றி சிறு குறிப்பாவது இருந்ததா? யோசித்துப் பாருங்கள்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று படித்திருக்கிறேன். அப்போது விளங்காத அர்த்துங்கள் இப்போது புரிகின்றன.
உங்களை நீங்களே இனங் காட்டி விட்டீங்கள். இனி மட்டுநகர் உங்கள் மீது காறித் துப்பத் தயங்காது
யாழ்ப்பாண மக்களே எங்களை மன்னியுங்கள். </span>
நன்றி தமிழலை நிழற் பதிப்பு....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>