04-01-2004, 11:47 AM
<span style='color:red'>தமிழ்த்தேசியத்திற்குப் புத்துயிர் அளித்த தேசிய தலைவர்
<img src='http://sooriyan.com/images/stories/ltte/praba1.jpg' border='0' alt='user posted image'>
Thursday, 01 April 2004
உலகில் கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தே ஆறு முதுமொழிகளுக்குள் தமிழ் மொழியும் ஒன்றாகும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திருக்குறள் உலகிலே தன்னிகரற்ற மிக உன்னத அறநூலாகத் திகழ்கின்றது.
பிற்பட்ட காலப்பகுதியில் தமிழ்மொழி 17வது இடத்துக்குப் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதனை மொழி ஆய்வாளர்களின் கருத்துக்கள் எடுத்துக்கூறுகின்றன. தாய்மொழி தமிழ்நாட்டில்கூட புத்துயிர் பெற்றெழ வேண்டியநிலையிலேயே இருந்து வருகின்றது.
சிங்கள மொழி 70வது இடத்தினை வகித்து வருகின்ற போதும் சிறிலங்கா என்கிற நாடு அம்மொழிக்கு உண்டு. அதனால் சிங்கள தேசியம் மேலோங்கி நிற்கின்றது.
ஆனால், தமிழினம் தன் தாய் மொழி, தாய்மண், கலை பண்பாடு, வரலாறு, இனத்துவம் போன்ற தேசிய அடையாளங்களை இழந்துபோகக்கூடிய ஓர் ஆபத்தான நிலையிலேயே அப்போது வாழ்ந்தது.
தமிழ்த் தேசிய இவ்வரலாற்று நெருக்கடியான அரசியல் சூழலில், அரசியற் போராட்டங்களை அரசியற் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்தார்கள்.
இருந்தபோதிலும் தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பதில் அதிகம் வெற்றிபெறவில்லை. மாறாகத் தமிழர் என்கிற உணர்வைத் தமிழர்களுக்கு ஊட்டுவதில் வெற்றி பெற்றார்கள்.
தமிழ்த் தேசியத்தைப் பிளந்து அது பற்பல சிறு சிறுகளாகச் சிதறும்படி செய்ய வேண்டுமென்பதே சிங்கள அரசின் நோக்கமாக இருந்தது. அந்த மூல நோக்கத்தை எப்போதும் கைவிடவில்லை.
அதாவது சிங்களம் பேரெழுச்சி பெற்றதும் சிங்களமே அரசகருமமொழியாகியது. அதனால் தமிழ்மொழி ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டது.
சிங்களத் குடியேற்றங்களைத் தமிழர் தாயக பூமியில் நிறுவித் தாய்மண் குடைந்தெடுக்கப்பட்டது.
தமிழரின் கலைபண்பாட்டின் சிறப்புப் பண்புகளைச் சீர்குலைக்கும் புதியகளத்தை உருவாக்கியது.
பழங்குடி மக்களாகிய தமிழினத்தை; வரலாற்றுச் சுவடிப்படி மூடிமறைக்கும், வரலாற்றைத் திரிவுபடுத்தும் ஆவணங்களைச் சிங்கள பௌத்த பீடமும், சிங்கள அரசும் தயாரித்தது.
சாதி,மதம், பிரதேசம் ஆகிய சில்லறை வேற்றுமைகளை உருவாக்கிப் பிரித்தாளும் தந்திரோபாயத்தினைக் கையாள்கின்றது சிங்கள தேசியம். இது தமிழரின் இனத்துவத் தனித்தன்மையை இழக்கவைக்கக் கூடிய பேராபத்தாகத் தோற்றமெடுத்தது.
இத்தகையதொரு ஆபத்தான, நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டத்தில்தான் பேரினவாத சக்திகளை எதிர்த்து நிற்கக் கூடியவாறு தமிழ்த்தேசிய பலத்தை புனருத்தாரணம் செய்ய வேண்டுமென்கிற முதற்பணி தமிழினத்திற்கு உருவாகியது.
அப்பணியைப் பொறுப்பேற்ற தமிழ்த்தேசியத் தலைவரான வே.பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார். உயிரற்ற இருப்புக்கு உயிரைக் கொடுக்கவல்ல மனோ தைரியம் அவரிடம் இருந்தது.
சாதி, மதம், பால், பிரதேசம் ஆகிய சில்லறை வேற்றுமைகளுக்கு அப்பால் பொது எதிரியை எதிர்த்து நிற்பதற்குத் தமிழ்த் தேசியத்தின் கீழ் ஒன்றிணைந்து போராடும் குறிக்கோளுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை அவர் கட்டியெழுப்பினார்.
தமிழ்த் தேசிய உணர்வுக் காலமாக அவரின் காலமாக இருந்தது தமிழ்த் தேசிய உணர்வு இங்கு பேரெழுச்சி பெற்றது.
தேசிய தலைவரின் உறுதியும், கொள்கைப் பிடிவாதமும், போர்க்குணமும் தான் வீரத்தனமான தளபதிகளையும், போராளிகளையும், தமிழ் சமுதாயத்தையும் உருவாக்கியுள்ளது. இன்று பலமான இனமாக உலகில் உயர்ந்து நிற்க வைத்ததும் அதுவே.
இந்திய-இலங்கை ஒப்பந்தகாலத்தில் மூத்த தளபதிகளான புலேந்திஅம்மான், குமரப்பா பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நடைபெற்ற உண்மை நிகழ்வை நினைவு கூறுவது இங்கு பொருத்தமானதாகும்.
அதாவது இந்தியத் தூவர் ஜே.என.தீக்ஷித் தலைவருடன் கலந்துரையாடும் போது கொள்கை பிடிவாதத்திலிருந்து இறங்கி வரும்படியும், அப்படி இல்லாவிட்டால் இரு தளபதிகளை இழந்து பலவீனமான நிலைக்குத் தங்கள் இயக்கம் தள்ளப்படும் என்னும் கருத்தைத் தெரிவித்து, அச்சுறுத்தி இருந்தார்.
அதற்குத் தலைவர் பதிலளிக்கையில் ஒவ்வொரு போராளிகளையும் தளபதிகளாகவே வளர்தெடுக்கிறேன். அதனால் கொள்கைக்காக இரு தளபதிகளை இழப்பதில் விடுதலைப்போராட்டம் பலவீனப்படாது என உறுதிபடக் கூறினார்.
தமிழீழ இலட்சியம் என்ற உயர்ந்த கொள்கைக்காக விடுதலைப் போரில் தளபதிகள், போராளிகள், மக்கள் கொட்டிய குருதியால் புனிதமாக்கப்பட்டுள்ள இந்த தாயகபூமி தியாக கிரீடத்தை அணிந்து கம்பீரமாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க தாய்மண் மானமிழக்கத் துணிந்தவராகக் கருணா தமிழீழக் கொள்கைப் பிடிவாதத்திலிருந்து ஒதுங்கித் துரோகக்கிரீடத்தை அணித்துள்ளார். இனி இந்தத் தாய்மண்ணில் கருணாவின் நிழல்படுவது கேவலம்.
கருணாவின் துரோகமானது தேசியத் தலைவருக்கு மட்டும் இழைக்கப்பட்டதாக எவரும் கருதிவிடமுடியாது.
கருணாவின் துரோகம் தமிழர்களது விடுதலைப்போருக்கு இழைக்கப்பட்டதாகும்.
கருணாவின் துரோகம் உலகில் வாழும் தமிழினத்திற்கு இழைக்கப்பட்டதாகும்.
கருணாவின் துரோகம் ஒட்டுமொத்தமாகத் தமிழ்த் தேசியத்திற்கு இழைக்கப்பட்டதாகும். ஆதனால் தமிழ்த்தேசியம் துரோகத்தனத்தின் வடுக்களை அதிகம் சுமந்தே நிற்கிறது. கருணாவை ஊட்டி வளர்ந்த தாயகம் தலைவிரிகோலமாக்கப்பட்டு மானமழியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியத் தூய்மையான இரத்தத்தில் பிரதேசவாதக் கிருமிகளைக் கருணா கலந்துள்ளார். அத்தகைய பிரதேசவாத வெறியர்களையும், துரோகிகளையும் அடியோடு ஒழித்துவிடவேண்டும்.
அது மக்களின் தூர நோக்கப் பார்வைகளிலும், விழிப்புணர்விலும், ஒற்றுமையிலும் தங்கியுள்ளது. அதற்கு அப்பால் மக்கள் தற்காலிக நலனுக்காக தமிழ்த் தேசியத்தின் மீதான பிடிவாதத்தையும், பற்றுறுதியையும், சிறிதும் தளரவிட்டுவிடக்கூடாது.
தமிழ்த் தேசியம் நிர்மூலமாக்கப்படவேண்டுமென்பதில் தமிழ் விரோதசக்திகளுடன் சிங்கள தேசியமும், இந்தியத் தேசியமும் தீவிரமாகவே முயன்று வருகின்றது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அதற்கான முயற்சியைத் தொடர்ந்து நிறைவேற்றுவதே அவர்களது கொள்கையாக இருக்கிறது.
இவ் அளப்பரிய கஸ்ர காலங்களில் எல்லாம் அழிந்து விடாமல் தேசியத்தைப் பாதுகாப்பதற்காக எந்த சூழ்நிலையிலும், எந்தவொரு கட்டத்திலும் வளைந்துகொடுக்காத தைரியசாலியாகத் தேசியத் தலைவர் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றி வருகிறார்.
விடுதலைப் போராட்ட காலங்களில் இடையூறுகள் அதிகமாக இருப்பது உறுதியான வெற்றிக்கு அறிகுறி என்பதே அவரின் காலத்தில்தான் தமிழினத்திற்கு புதிய நம்பிக்கை, புதிய உறுதி, புதிய ஒற்றுமை பீறிட்டெழுந்தன.
தமிழர்கள் எவ்வளவுக்கெவ்வளவு தங்கள் தேசிய கௌரவ உணர்ச்சியின் பிடியில் தளம்பினரோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் அரசியல் அழிவிற்கான நிர்ப்பந்தங்களை அதிகமாகச் சிங்களம் தமிழர்கள் மீது சுமத்தவே செய்தது; செய்யும்.
ஆதலால் தமிழினத்தின் மொழி, மண், கலைப்பண்பாடு, வரலாறு, இனத்துவம் போன்றவற்றைமுழுமையாக மீட்டெடுக்கும் விடுதலைப்போரில் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இன ஒற்றுமையுடன் மகத்தான போராட்டத்தில் பங்காற்றுவோம்.
ஒரு இலட்சியத்தை அடைய ஒரே இயக்கம்தான் போராட வேண்டும். அந்த இலட்சியத்தை ஆதரிக்கும் சகலரும் அவ்வியக்கப் பணிகளுக்குப் பின்புலப் பலமாக இருக்க வேண்டும். சில்லறை வேற்றுமைகளை மறந்து பகைவர்களை ஏகோபித்து எதிர்க்கும் சக்தியான தேசியத்தலைவரின் கீழ் இன ஒற்றுமையுடன் செயலாற்றவேண்டும்.
தமிழீழதேசம் ஒரு நாளும் அடியோடு வீழ்ச்சியுறாது. அது எப்போதும் உயர்ந்த கம்பீரமான கோபுரமாகவே காட்சிதரும். தமிழீழ தேசத்தை மறப்பவர்கள் தான் வீழ்ச்சியடைவர்கள்.
இ.கபிலன் / ஈழநாதம்</span>
நன்றி சூரியன் டொட் கொம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>