Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News பற்றி உங்கள் கருத்து
#9
இங்கு சில கேள்விகளை நான் முன்வைக்கின்றேன். இந்த கேள்விகளுக்கு ஆம் என்ற விடை உங்களிடம் இருந்தால் மேலே செல்லுங்கள் இல்லை என்ற விடை உங்களிடம் இருக்குமாயின்................????????

முதலாவது தமிழர்களாகிய நாம் இலங்கையில் உரிமைமறுக்கப்பட்டவர்களாக வாழுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த உரிமைகளை வென்றெடுப்பதுதான் இன்று எங்களின் முன்னுள்ள பிரதான இலக்கு, நோக்காக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த உரிமைகளை காந்தீய வழிமுறைமூலம் வென்றெடுக்கப்பட முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா
ஆம் என்றால்

அந்த காந்தீயவழிமூலம் வென்றெடுக்கப்படமுடியாத உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமை கொண்ட ஒரே சக்தி விடுதலைப்புலிகள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா
ஆம் என்றால்

அந்த சக்தியையும் அந்தப்போராட்டத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு நம் ஈழத்தமிழன் எல்லோருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

இந்த சக்தியை தாங்கி வைத்திருக்கும் மக்களை குழப்புவதன் மூலம் அந்த போராட்டத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோமா?
ஆம் என்றால

இந்த சக்தியையும் போராட்டத்தையும் அழித்துஒழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏராளமான வெளிச் சக்திகள் அன்றுதொட்டு இன்றுவரை பல்வேறுவழிகளில் முயன்றுகொண்டு வருகின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த மக்களை கடந்த காலங்களில் பல்வேறுபட்ட திரிபட்ட செய்திகளை பலவழிகளிலும் வழங்கி பல குழப்பங்களை விளைவிக்க முயன்றதை நாம் அறிவோமா
ஆம் என்றால்

அவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் மேலும் பலகுழப்பங்களை விளைவிக்க முயல்கின்றார்கள், முயல்வார்கள் என்பதை எம்மால் காண முடிகின்றதா?
ஆம் என்றால்

அந்த சக்திகளை இனங்கண்டு அவர்களின் நோக்கம்களை இனங்கண்டு அவர்கள் செய்திகளை இனங்கண்டு கொள்ளாது அவர்கள் செய்திகளை மீளபிரசுரித்து அவர்களுக்கு மேலும் வாசகர்களைத் தேடிக்கொடுப்பது நமது உரிமைகளை வென்றெடுக்க எந்த விதத்திலாவது உதவுமா?

இதற்குரிய விடையை நீங்களே சொல்லுங்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 04-01-2004, 04:57 AM
[No subject] - by nalayiny - 04-01-2004, 06:52 AM
[No subject] - by nalayiny - 04-01-2004, 07:08 AM
[No subject] - by Kanani - 04-01-2004, 08:55 AM
[No subject] - by Eelavan - 04-01-2004, 09:20 AM
[No subject] - by Kanthar - 04-01-2004, 09:33 AM
[No subject] - by anpagam - 04-01-2004, 10:03 AM
[No subject] - by manimaran - 04-01-2004, 10:51 AM
[No subject] - by kuruvikal - 04-01-2004, 01:42 PM
[No subject] - by Mathivathanan - 04-01-2004, 04:20 PM
[No subject] - by kuruvikal - 04-01-2004, 05:00 PM
[No subject] - by Mathivathanan - 04-01-2004, 05:05 PM
[No subject] - by Aalavanthan - 04-01-2004, 07:50 PM
[No subject] - by Kanthar - 04-02-2004, 12:12 AM
[No subject] - by Mathan - 04-02-2004, 06:43 AM
[No subject] - by shanmuhi - 04-02-2004, 07:18 AM
[No subject] - by ishwari - 04-03-2004, 08:16 AM
[No subject] - by Mathivathanan - 04-03-2004, 03:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)