04-01-2004, 09:20 AM
நண்பரே
பலதரப்பட்ட ஊடகங்களிலிருந்தும் நீங்கள் கொண்டு வந்து தரும் செய்திகளால் கடந்த ஒரு வாரமாக களத்தில் சலசப்பு ஏற்பட்டது உண்மைதான் ஆனால் அது இவ்வாறு தனிப்பட்ட மிரட்டலாக அல்லது கேவலமான அவதூறாக வெளிப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதோ ஏன் எதிர்ப்பதோ உங்கள் இஷ்டம் அதை யாரும் தடை சொல்ல முடியாது தமிழ்த் தேசியம் பற்றிய தெளிவு உள்ளவர்கள் அதற்குப் பதிலளிக்கலாம் செய்திகளின் உண்மைத் தன்மை பொய்த்தன்மையை எடுத்துக்கூறலாம் அதன் மூலம் செய்திகள் வெளிவந்த ஊடகங்கள் பற்றிய தெளிவு கூட வாசகர்களுக்கு ஏற்படலாம்
இவற்றையெல்லாம் விடுத்து உங்களை அல்லது நீங்கள் ஆரம்பித்த கருத்துப்பக்கத்தை தடை செய்யும்படி கோரும் உரிமை யாருக்கும் கிடையாது பொறுப்பாளர் தடை செய்வாராக இருந்தாலும் தகுந்த விளக்கமளிக்கப்படவேண்டும்
அவர்களே உங்கள் செய்திச்சேவைக்கு பாராட்டுக்கூடத் தெரிவித்திருக்கிறார்கள் அப்பிடியிருக்க நீங்கள் வீணாக மனவருத்தம் அடைவது ஏனோ
கள நேயர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் நாம் இங்கே எமது கருத்துகள் மூலம் காட்டிக் கொள்வது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற முகங்களையென்றாலும் அதை சொல்வதற்கு நாம் எம்மை புனை பெயர்கள் என்ற முகமூடிகளுக்குள் மறைத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது
அப்பிடியிருக்க இந்த முகமூடி சரி அந்த முகமூடி பிழை என்று கூறும் அருகதை யாருக்கும் இல்லை உங்கள் முகமூடிகளுக்கு பரிசில்களும் கிடைக்கப் போவதில்லை
மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் கொடுங்கள் அவை குழப்பம் விளைவிப்பனவாக இன்றி உண்மையிலேயே இந்த தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு மாற்று எற்பாடான கருத்துகளாக இருக்கும் பட்சத்தில் நான் எனது உண்மையான பெயருடனும் அறிமுகத்துடனும் கருத்தை எழுதுவதற்கு தயார்
வேண்டுமானால் மாற்றுக்கருத்து அனுமதிக்கப்படவேண்டும் என்று சொல்பவர்கள் கூட அதற்காக கருத்துக்களத்தை ஆரம்பியுங்கள் பதில் சொல்ல நான் மட்டுமல்ல பலர் முன் வருவார்கள்
இவ்வாறு ஆக்கபூர்வமாக ஒரு விடயத்தை அணுகுவதை விடுத்து குழப்பம் விளைவிப்பதும் தனிப்படத் தாக்குவதும் கோழைகள் செயலன்றி வேறில்லை
நட்புடன்
ஈழவன்

\" \"