04-01-2004, 08:51 AM
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
29-03-04
[align=center:a110557eb8]<b>தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அபிலாசையை வெளிப்படுத்துவோம்</b>.[/align:a110557eb8]
இரு தசாப்தங்களைக் கடந்து பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையானதோர் கட்டத்தை அடைந்திருக்கிறது. நாம் எமது பாரம்பரிய தாயகத்தில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால் காலங்காலமாக ஆட்சிக்குவந்த சிறீலங்கா ஆட்சியாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட போது ஐனநாயக ரீதியில் அகிம்சை வழியில் அதனை எமது மக்கள் எதிர்த்தனர். ஆனால் தமிழ் மக்களின் ஐனநாயக வழிகளிலான போராட்டங்கள் மதிக்கப்படாது ஆயுத பலம் கொண்டு அடக்கப்பட்டன. அன்று நாம் அடக்கி ஒடுக்கப்பட்டபோதெல்லாம் அதனை சமபலத்துடன் துணிந்து எதிர்கொள்வதற்கான உறுதியான தலைமைத்துவமோ போராட்ட சக்தியோ இன்றி நாம் பலவீனமான மக்களினமாக வாழ்ந்தோம். ஐனநாயக ரீதியிலான அகிம்சை வழிப்போராட்டங்கள் அடக்கப்பட்டு எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்ட போது இளம் தலைமுறை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு சிறு துளிராக வடிவெடுத்த எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரு விருட்சமாகி பலம்மிக்கதோர் இனமாக எம்மை மாற்றியுள்ளது.
இன்று பேச்சுவார்த்தை மேசைகளில் ஐனநாயக வழிமுறைகள் ஊடான எமது மக்களின் கருத்துகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் மதிப்பளிப்பதன் காரணம் எமது போராட்ட பலமே. போராளிகளினதும் எமது மக்களினதும் குருதியாலும் தசையாலும் கண்ணீராலும் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டம் இன்று உலகின் மனச்சாட்சியைத் தொட்டுவிட்ட ஆற்றல்மிக்கதோர் போராட்ட சக்தியாகப் பரிணமித்துள்ளது. இவ்வாறானதோர் வரலாற்றுப் புறநிலையிலேயே இன்று நாம் எமது அபிலாசைகளை ஒன்றுபட்டுநின்று ஐனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை ஐனநாய ரீதியிலான எமது கருத்து வெளிப்பாடானது கடந்த காலங்களைப் போலன்றி, பெரும் போராட்ட சக்தியாலும் உறுதியான தமிழீழத் தேசியத் தலைமைத்துவத்ததாலும் காத்திரத் தன்மையுடையதாக அமைகிறது. இன்று எமது தேசியத் தலைவரின் தலமைத்துவத்தை ஏற்று ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்பதை ஏற்று தமிழ்த்; தேசியத்தை முன்னெடுக்கும் போராட்ட முன்னெடுப்புக்களுக்கு உந்துசக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகியவற்றை முன்வைத்து ஐனநாயகப் பாதையில் மக்களாணையைப் வெளிப்படுத்துவதனு}டாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபட்டு நின்று தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறானதோர் புறநிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுநின்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஒருமித்த மக்களாணையை வெளிப்படுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி, ஒன்றுபட்ட சக்தியாக நாம் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்றுபட்டுநின்று சுயநிர்ணய உரிமைகொண்ட கௌரவமான சுதந்திரமான மக்களினமாக வாழ விரும்புவதை இவ்வுலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஐனநாயக ரீதியல் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை அதன் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவது என்பது, நாம் பலமான ஒன்றுபட்ட மக்களினமாக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்பதனை முழு உலகுக்கும் தெளிவாக எடுத்துக்காட்டும். எமது மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான, சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் சுயநல அரசியல் நோக்கங் கொண்டவர்களைத் தமிழ் மக்கள் இத்தேர்தலின் மூலம் புறக்கணித்து, தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்குச் சரியானதோர் வரலாற்றுப் படிப்பினையைப் புகட்ட வேண்டும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஒருமித்து தமது மக்களாணையை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி ஐனநாயக ரீதியில் நாம் எமது அபிலாசைகளைத் தெளிவாக இவ்வுலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஐனநாயக ரீதியிலும் நாம் ஒன்றுபட்ட ஒரு பெரும் போராட்ட சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதனை அனைவருக்கும் தெளிவாக உணர்த்துவோம்.
[align=center:a110557eb8]-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-[/align:a110557eb8]