07-03-2003, 07:01 PM
தைரியமாய் இரு
தமிழா...!
தாயகத்தின் காரியத்தில்
எப்பொழுதும் காவியம்
படைத்துவந்த நீ
இப்பொழுது ஏன்
கன்னத்தில் ஈரம்
கசிந்தவனாய் கலங்குகியாய்...?
தைரியமாய் இரு
தமிழா...!
ஏன் இன்னும்
கண்களை கசக்குகிறாய்...?
சொல்லாமல் சென்ற
சுதந்திரம் இதுவரை
திரும்பிவராமல்
இருப்பதனாலா...?
சொட்ட சொட்ட
குருதி சிந்திவிட்ட
போதிலும்
மெல்ல மெல்ல
விடியல் வந்துவிட்ட
போதிலும்
இன்னும் இருட்டாகவே
இருப்பதற்காகவா-உன்
இரு கண்களையும்
கசக்கிக்கொண்டிருக்கிறாய்...!
தைரியமாய் இரு
தமிழா...!
தாகத்தை
மெல்ல மெல்ல
தைரியம் தணித்துவிடும்...!
இத்தனை வீரர்களை
விலைகொடுத்தும்
வாங்கிவிட முடியவில்லையே
என்னும்
ஏக்கத்தின்வழியே
ஓடிவரும் கண்ணீரின்
மறுவடிவமாய் வந்ததிந்த
தைரியம்...!
உனது வீரம்தான்
விடிநிலத்தின் விழுதுகள்
அந்த விழுதுகளை
நோக்கி கல்லெறியாதே
நிறுத்து...!
தண்ணீரில் நனைந்த
குருவியாட்டம்
கண்ணீரில் நனையும்
காரியத்தை கைவிட்டு
தைரியமாய் இரு
தமிழா...!
உன்
தோள்கள் வீரத்தின்
மறுவடிவம்
உன்
நெஞ்சம்
வேகும் நெருப்பினிலும்
விளையாட துணிந்த
நெஞ்சம்...!
தேசத்தில் ஆயிரம்
சோதனைகள்...!
அதற்காக
சோகத்தின் குழந்தையென
விம்மி விம்மி
அழுவாயா...?
கண்ணீரை துடைத்துவிட்டு
தைரியமாய் இரு
தமிழா...!
கரிகாலன் தேசத்தில்
கயவரது காரணமில்லாத
செய்கையினால்
மலர்மனம்போல் இருந்த
உன் மனதில்
தவறிவந்த கார்மேகம்
கண்வழி வந்ததுபோல்
கதறி கண்ணீர்மழை
பொழிகிறாயா...?
அவர்களின் காரணி
இல்லாத காரியத்தால்
தோல்வி என்ற
சமுத்திரத்தில் மூச்சுதிணறி
மூழ்கப்போகிறவர் அவர்கள்தான்
என்பதை மறந்து நீ
தவிக்கிறாயா...!
தைரியமாய் இரு
தமிழா...!
அங்கே பார்...!
விடுதலைக்காக ஏற்றிவைத்த
வீரதீபம் இன்னும்
எரிந்துகொண்டுதான்
இருக்கிறது...!
தாயகத்தின் இறுதிவீரன்
இருக்கும்வரை
வீழமாட்டார் வீரப்புலிகள்...!
உடலிலும் உள்ளத்திலும்
இறுதியுயிர் இருக்கும்வரை
இறக்கமாட்டார்
எங்கள் தமிழர்...!
வீரத்தை விதைத்துவிட்டு
வீரமண்ணில் தாமும்
விதையாய் விழுந்துவிட்ட
வீரமறவர்கள் கல்லறையில்
காதுவைத்து கேட்டுப்பார்...!
புதைகுழியில் கனவுடனே
ஓய்வெடுக்கும் மாவீரர்
மங்காத கனவுகள்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
தய்நிலம் தடையின்றி
ஒருநாள் தலைநிமிரும்...!!!
ஆகையினால்
தைரியமாய் இரு
தமிழா...!!!
தமிழா...!
தாயகத்தின் காரியத்தில்
எப்பொழுதும் காவியம்
படைத்துவந்த நீ
இப்பொழுது ஏன்
கன்னத்தில் ஈரம்
கசிந்தவனாய் கலங்குகியாய்...?
தைரியமாய் இரு
தமிழா...!
ஏன் இன்னும்
கண்களை கசக்குகிறாய்...?
சொல்லாமல் சென்ற
சுதந்திரம் இதுவரை
திரும்பிவராமல்
இருப்பதனாலா...?
சொட்ட சொட்ட
குருதி சிந்திவிட்ட
போதிலும்
மெல்ல மெல்ல
விடியல் வந்துவிட்ட
போதிலும்
இன்னும் இருட்டாகவே
இருப்பதற்காகவா-உன்
இரு கண்களையும்
கசக்கிக்கொண்டிருக்கிறாய்...!
தைரியமாய் இரு
தமிழா...!
தாகத்தை
மெல்ல மெல்ல
தைரியம் தணித்துவிடும்...!
இத்தனை வீரர்களை
விலைகொடுத்தும்
வாங்கிவிட முடியவில்லையே
என்னும்
ஏக்கத்தின்வழியே
ஓடிவரும் கண்ணீரின்
மறுவடிவமாய் வந்ததிந்த
தைரியம்...!
உனது வீரம்தான்
விடிநிலத்தின் விழுதுகள்
அந்த விழுதுகளை
நோக்கி கல்லெறியாதே
நிறுத்து...!
தண்ணீரில் நனைந்த
குருவியாட்டம்
கண்ணீரில் நனையும்
காரியத்தை கைவிட்டு
தைரியமாய் இரு
தமிழா...!
உன்
தோள்கள் வீரத்தின்
மறுவடிவம்
உன்
நெஞ்சம்
வேகும் நெருப்பினிலும்
விளையாட துணிந்த
நெஞ்சம்...!
தேசத்தில் ஆயிரம்
சோதனைகள்...!
அதற்காக
சோகத்தின் குழந்தையென
விம்மி விம்மி
அழுவாயா...?
கண்ணீரை துடைத்துவிட்டு
தைரியமாய் இரு
தமிழா...!
கரிகாலன் தேசத்தில்
கயவரது காரணமில்லாத
செய்கையினால்
மலர்மனம்போல் இருந்த
உன் மனதில்
தவறிவந்த கார்மேகம்
கண்வழி வந்ததுபோல்
கதறி கண்ணீர்மழை
பொழிகிறாயா...?
அவர்களின் காரணி
இல்லாத காரியத்தால்
தோல்வி என்ற
சமுத்திரத்தில் மூச்சுதிணறி
மூழ்கப்போகிறவர் அவர்கள்தான்
என்பதை மறந்து நீ
தவிக்கிறாயா...!
தைரியமாய் இரு
தமிழா...!
அங்கே பார்...!
விடுதலைக்காக ஏற்றிவைத்த
வீரதீபம் இன்னும்
எரிந்துகொண்டுதான்
இருக்கிறது...!
தாயகத்தின் இறுதிவீரன்
இருக்கும்வரை
வீழமாட்டார் வீரப்புலிகள்...!
உடலிலும் உள்ளத்திலும்
இறுதியுயிர் இருக்கும்வரை
இறக்கமாட்டார்
எங்கள் தமிழர்...!
வீரத்தை விதைத்துவிட்டு
வீரமண்ணில் தாமும்
விதையாய் விழுந்துவிட்ட
வீரமறவர்கள் கல்லறையில்
காதுவைத்து கேட்டுப்பார்...!
புதைகுழியில் கனவுடனே
ஓய்வெடுக்கும் மாவீரர்
மங்காத கனவுகள்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
தய்நிலம் தடையின்றி
ஒருநாள் தலைநிமிரும்...!!!
ஆகையினால்
தைரியமாய் இரு
தமிழா...!!!

