04-01-2004, 02:34 AM
<img src='http://www.virakesari.lk/20040401/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
"நிரந்தர சமாதானமும், சந்தோஷகரமான வாழ்வும் கிடைக்க என்னோடு இணைந்து வாருங்கள்''
இப்படித்தான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை முடித்து வைத்துப் பேசுகையில் நாட்டு மக்களை நோக்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.
பேச்சுவார்த்தையை முன்னெடுத்து சமாதானத்தை நிலை பெறச் செய்து புதிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எங்களுக்கு ஆணை தாருங்கள்'' என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரத்தை முடித்து வைத்துப் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
நாட்டு மக்கள் எல்லோரும் சமாதானத்தையே விரும்புகின்றார்கள் என்பதை நாடி ஓட்டம் பிடித்து தலைவர்கள் இருவரும் நிதர்சனமாக கண்டறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டியிருக்கிறது.
பறுவதம் பாட்டி: ஆட்சி பீடம் ஏறும் கட்சி விடுதலைப் புலிகளுடன் கட்டாயம் பேச்சுவார்த்தைகளை தொடக்கத்தான் வேண்டியிருக்கும் அப்படித்தானே!
பண்டா ஐயா: மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று 85.3 சதவீதமான மக்கள் புலிகளுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அபிப்பிராயம் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது.
பறுவதம் பாட்டி: எஞ்சிய வீதத்தினர் பேசக்கூடாது என்கிறார்களா?
பண்டா ஐயா: 4.8 சதவீதமே நோபேச்சு' என்கிறது. மிகுதி பேசலாம் பேசாமல் விடலாம். ஆகப் போவது எதுவும் இல்லை என்ற ரகம்.
பறுவதம் பாட்டி: பேசக்கூடாது என்பவர்களில் சிங்களவர்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.
சலீம் நானா: தமிழர்களும் இருப்பார்களே!
பண்டா ஐயா: யாருமே புலிகளுடன் பேசக்கூடாது என்று சொல்லவில்லையாம்.
சலீம் நானா: பேச வேண்டும் என்று 84 சதவீத மக்களிள் சுமார் 64 சதவீதமானோர் சில நிபந்தனைகளை முன்வைத்துத் தான் புலிகளுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். கண்டிஷன் தேவையில்லை என்று சொல்லுகின்ற ரகம் 13.3 மட்டும் தானாம். 19.3 சத வீதம் நடுநிலையாம். கண்டிஷன் தேவை என்ற ரகத்தில் சிங்களவர்கள் 66 சதவீதம், முஸ்லிம்கள் 23 சதவீதம், மலையகம் மற்றும் இதர தமிழர்கள் 18.8 வீதம்.
சலீம் நானா: இதிலிருந்து என்ன தெரிகிறது?
நியாயமான சில நிபந்தனைகளை பேச்சுவார்த்தையின்போது முன்வைப்பேன் என்ற எங்கள் தலைவியின் நிலைப்பாட்டை பெரும்பான்மையான தென் இலங்கை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் சுட்டு நிற்கிறது.
பறுவதம் பாட்டி: நிபந்தனைகள் என்றால் சில்லெடுப்புத்தான் போங்கள்.
சலீம் நானா: நான் அதனை சொல்ல வரவில்லை. பதவியில் ஏறப்போவது எங்கள் கட்சிதான் என்பதை கூறவே இந்த விகிதாசாரத்தை தந்தேன்.
வாழ்க்கைச் செலவை குறைப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவதில் உருப்படியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய கட்சிகூட எங்கள் கட்சிதான் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
பண்டா ஐயா: தேர்தலில் மூன்றாவது சக்தியாக வெற்றி பெற்று விளங்கப் போவது யார் தெரியுமா?
சலீம் நானா: ஹெல உறுமய பிக்குகள் இந்த தேர்தலில் தங்களுக்கு 36 ""சீட்டுக்கள்'' கிடைக்கும் என்று பேப்பர்களில் பணம் கொடுத்து விளம்பரம் போட்டிருக்கிறார்கள். ஒரு கோடியே 20 லட்சம் பேர் இந்த ÷தர்தலில்வாக்களிப்பார்கள். இவர்களில் 90 லட்சம்பேர் பௌத்தர்கள், இவர்களில் 18 லட்சம் பேராவது எங்களது வேட்பாளர்களுக்கு "வோட்' போடுவார்கள் என்றும் இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பறுவதம் பாட்டி: என் கணிப்பு ஆகக்கடியது 4தான்! இதில் ஒன்று தேசியப்பட்டியல் எம்.பி.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>