04-01-2004, 02:25 AM
மட்டக்களப்பில் 4 புலிகள் கைதாகி விளக்க மறியலில்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவடிமுன்மாரி கோட்ட இராணுவத் தளபதி சச்சு மாஸ்டர் உட்பட நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் காத்தான்குடி பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய் மாலை கைது செய்யப்பட்ட இவர்களை மட்டக்களப்பு நீதிவான் எம்.எச்.எம்.அஜ்மீர் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சச்சுமாஸ்டர் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை மகேந்திரன் (32 வயது), சாமித்தம்பி வரதன் அல்லது மயூரன் (26 வயது), வேலாப்போடி வரதகுமார் அல்லது மனோகர் ( 19 வயது), அரசமணி சுரேஷ் அல்லது குருபரன் அல்லது கதீஸ்வரன் (19 வயது) ஆகிய நால்வருக்கும் எதிராக அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் பிரயாணம் செய்த டொல்பின் வாகனம் கைக்குண்டுகள்4, ரி 56 ரக துப்பாக்கிரவைகள்73, 22 இன உயிருள்ள ரவைகள்1, ரி 56 ரக மகசின்7, பச்சை நிற பூச்சஸ்2, எல்.எம்.ஜி ரூல் ஹிட்1, ஒயில் போத்தல்2, கறுப்பு சீலை1, கறுப்பு நிற வயர்கள்2 துண்டு, புலிகள் இயக்க இலக்க தகடு1, சயனைட் குப்பி1 ஆகியன நீதிமன்றில் சான்று பொருட்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து கொடுக்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மஞ்சந் தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாகவுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து சோதிக்கப்பட்டபோதே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
மட்டக்களப்பு நகரிலிருந்து கொக்கட்டிச் சோலை நோக்கி சென்றபோதே தடுக்கப்பட்டிருக்கிறது.மட்டக்களப்பு சிறைச்சாலையில் நான்கு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே பிணையில் விடும் அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஏற்கனவே கைக்குண்டுகளுடன் இரு வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பத்துபேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>