04-01-2004, 02:23 AM
மட்டக்களப்பில் இளைஞர் குழு வர்த்தக நிலையங்களை பூட்டி திறப்புகளை எடுத்துச் சென்றுள்ளதாக புகார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அநாமதேய பிரசுரங்களாலும் வீண் வதந்திகளாலும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை செவ்வாய் பிற்பகல் நடமாடிய இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று சில வர்த்தக நிலையங்களை பூட்டுமாறு வற்புறுத்தி திறப்புகளை எடுத்துச் சென்றிருப்பதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோதகத்தர் சின்னையா ரவீந்திரராஜா, வர்த்தகர்களான மனோகரன் சதீஸ்குமார், வைரமுத்து மார்க்கண்டு ஆகியோரே முறைப்பாடு செய்துள்ளனர்.
புதன்காலை மட்டக்களப்பு கள்ளியங்காட்டிலுள்ள ஆடைத்தொழிற்சாலையிலிருந்து இளைஞர் குழுவினர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த போது ஸ்தலத்திற்கு பொலிஸார் சென்று தடுத்ததுடன் பொருட்களை திருப்பியும் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>