04-01-2004, 02:21 AM
இராஜன் சத்தியமூர்த்தியின் ஈமக்கிரியைகள் இன்று
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சி வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தியின் இறுதிச் சடங்குகள் இன்று வியாழன் மாலை நாவலடியில் நடைபெறும்.
அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் அமரர் சத்திய மூர்த்தியின் சடலம் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பினரால் நீக்கப்பட்டுள்ள கருணா அம்மான், அமரர் இராஜன் சத்தியமூர்த்திக்கு மாமனிதர் பட்டம் வழங்கியிருப்பதாக மட்டக்களப்பு நகரில் ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சி வேட்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி, அவரின் மைத்துனர் கனகசபை ஆகியோரி2சடலங்கள் செவ்வாய் மாலையிலிருந்து புதன்கிழமை நண்பகல் வரை திருமலை வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெருமளவு பொதுமக்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்.
இன்று வியாழக்கிழமை படையினரின் கட்டுப்பாட்டிலில்லாத கரடியனாறு, கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர் பட்டிருப்பு பாலத்தினூடாக ஊர்வலமாக களுவாஞ்சிக்குடி, செட்டிபாளையம், ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு நகருக்கு எடுத்து வரப்பட்டு காந்தி சதுக்கத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாவலடிக்கு எடுத்துச் செல்லப்படும்.
மட்டக்களப்பு வர்த்தகர் சங்கம் அதன் தலைவராக இருந்த இராஜன் சத்திய மூர்த்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வியாழன் பி.ப. 12 மணிக்கு பின் வர்த்தக நிலையங்களை மூடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>