04-01-2004, 02:19 AM
கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒப்புதல் அளிக்கவேண்டும். பதவிக்கு வந்தால் அமுல்படுத்தவும் வேண்டும் என்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்
வடகிழக்கு இணைப்பு தொடரவேண்டுமா இல்லையா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை கிழக்கு மாகாணத்தில் உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதியையும் பிரதமரையும் பகிரங்க ஒப்புதல் வழங்குமாறும் பதவிக்கு வந்தால் அமுல்படுத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை விடுத்துள்ளது.
"பாராளுமன்ற தேர்தல்2004 முஸ்லிம்களின் விருப்பு?' என்ற தலைப்பில் கவுன்சில் தலைவர் ஏ.எச்.ஜீ.அமீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவை முன் வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் வடக்குகிழக்கு முஸ்லிம்கள் சார்பில் முஸ்லிம் கவுன்ஸிலால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எவையும் உள்ளடக்கப்படாமை விசனத்திற்குரியதாகும்.
முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டுமெனில் இவ்விரு முக்கிய கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரையும் பிரதமர் ரணிலையும் கீழுள்ள எமது கோரிக்கைகளுக்கு பகிரங்க ஒப்புதல் வழங்குமாறும் பதவிக்கு வந்தால் அமுல்படுத்துமாறும் கோருகிறோம்.
சமாதான பேச்சுவார்த்தைகளில் தனியான சுதந்திர முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.
இரண்டாயிரம் முஸ்லிம்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதன் மூலம் கிழக்கு வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன் உறுதி செய்யப்படவும் வேண்டும். அரசாங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறி முஸ்லிம்களின் பூர்வீக பூமியான மஜீத் நகரி (குரங்குபாஞ்சான்) லும், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் ஏனைய பகுதிகளிலும் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை நீக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களையும் கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும் சகல வசதிகளுடனும் மீள் குடியேற்றவும் அவர்களது புனரமைப்புக்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் கிழக்கு முஸ்லிம்கள் எவ்வாறு தமது வாக்குப்பலத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட எமது கவுன்ஸில் தீர்மானித்துள்ளது. எமது இக்கோரிக்கைகளுக்காக ஐ.ம.சு.மு. ஐ.தே.மு. என்பவற்றின் பதிலை முழு இலங்கை வாழ் முஸ்லிம்களும் விஷேடமாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் அவதானித்து நிற்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நாம் அனுப்பி வைத்த மடல்களுக்கு தகுந்த பதில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.
எமது இக்கோரிக்கைக்கு ஆக்கபூர்வமான, செயற்திறன்மிக்க தொடர்ச்சியான ஆதரவை முஸ்லிம்களிடம் வேண்டி நிற்கிறோம்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>