04-01-2004, 02:16 AM
<img src='http://www.muzhakkam.com/26032004/FrontNews/nedumaran.jpg' border='0' alt='user posted image'>
பழ. நெடுமாறன்
[b]<span style='color:red'>விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இந்தியா பரிசீலனை?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இந்தியக் கூட்டரசின் தடையை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொடா என்ற பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது இந்தியாவில் உள்ள போராளிக் குழுக்கள் பல இச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டன.
அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தடை செய்யப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இந்திய அரசுக்கு மனு அனுப்பியிருந்தார்.
இம்மனுவை பரிசீலிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. மனு மீது பரிசீலனை செய்யுமாறு பொடா மறுஆய்வுக் குழுவை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் தகவலை பொடா மறு ஆய்வுக் குழு நீதிபதி சகாரியா தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்க தடையை நீக்கக் கோரி நெடுமாறன் தாக்கல் செய்த மனு விவரம்
பொடாவின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என கடந்த 13-09-2002 அன்று இந்திய அரசிடம் பழ. நெடுமாறன் மனு அளித்தார்.
அம்மனுவின் விவரம் வருமாறு :
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும், அல்லது இந்திய நாட்டு மக்களின் மீது பயங்கரவாதத்தை ஏவும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவதற்கே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் என்றுமே இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தே வந்திருக்கிறது. அவ்வியக்கம் இலங்கையில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் குறிக்கோள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சியும், தன்னுரிமையும் பெறுவதேயாகும். இந்திய நாட்டின் உள்நாட்டு பிரச்னைகளில் தலையிடும் எண்ணமே என்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இருந்ததில்லை. இப்போதும் இல்லை.
இந்திய நாட்டில் எந்த வித பயங்கரவாத செயல்களிலும் அவ்வியக்கம் ஈடுபட்டதில்லை. அவ்வியக்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கூட அது ஒரு பயங்கரவாத செயல் அல்ல என்றும், அதனால் தடா சட்டத்தின் கீழ் வழக்கு நடத்த இயலாதென்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்ட ஆணையத்திடம் எழுத்து மூலமாக அளித்த மனுவில், விடுதலைப்புலிகள் இயக்கம், தங்களுக்கு இந்திய நாட்டின் பகுதிகளை தமிழ் ஈழத்தோடு இணைக்கும் எண்ணமோ, இந்திய நாட்டிலிருந்து பிரிந்து வரப் போராடும் எந்த இயக்கத்திற்கும் ஆதரவு அளிக்கும் எண்ணமோ எப்போதும் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஆக, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்காத, இந்திய நாட்டில் எந்த வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத, இந்திய நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத, வெளிநாட்டில் மட்டுமே செயல்படும் ஒரு விடுதலை இயக்கத்தை இந்திய நாட்டில் தடை செய்திருப்பது சட்டவிரோதமானது.
மேலும் ஏற்கெனவே சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. அதனால் மீண்டும் பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யவேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையின் பிரதமராக திரு. இரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின், இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கிவிட்டன. இப்பேச்சுவார்த்தைகளின் முன்னோட்டமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. இதன் மூலம், ஈழத்தமிழ் மக்களின் உண்மையான, முழுமையான பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என்பதையும், அவர்களை ஒதுக்கிவிட்டு இலங்கை இனப்பிரச்;னைக்கு எந்த வித தீர்வையும் கண்டுவிடமுடியாது என்பதையும் இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வந்த இனக் கலவரத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் இந்நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டியும், இனப் பிரச்சனை தீர்வதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டியும், இலங்கை அரசுக்கும் தமிழர்கள் பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் நான் தொடர்ந்து போராடி வருகிறேன்.
பொடா சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருப்பதன் மூலம், இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள என்னைப் போன்றவர்கள், அதற்காக குரல் கொடுப்பது சட்டவிரோதமாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த உலகின் எந்த மூலையில் வாழும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை தட்டிப்பறிக்க இயலாது. பயங்கரவாத செயல்களை தடுக்கவே இச்சட்டமேயன்றி, எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத பேச்சுக்களையும் முடக்குவதற்கு அல்ல.
எனவே, மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு பொடாச் சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோருகிறேன்.</span>
நன்றி முழக்கம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>