04-01-2004, 01:34 AM
<span style='color:red'>ஒரே வாக்கு வரலாற்றுக் கடமை
தமிழினம் ஏற்கெனவே ஒரு பெருமைக்குரிய இனம் என்பதில் சந்தேகமெதுவுமேயில்லை. ஆனால், அதற்காக கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னாலேயே எங்கள் மூதாதையர் அந்தரத்தில் பறந்துகொண்டு தமிழில் கதைத்துக் கொண்டிருந்தனர், என்று பழம் பெருமையையோ, அல்லது றைட் சகோதரர்களுக்கு முன்னாலேயே எங்கட இராவணன் Plane ஓடிக்கொண்டு திரிஞ்சவர் என்று இதிகாசப் பெருமையோ, அல்லது
அந்தக்காலத்திலேயே நாங்கள் அமெரிக்காவுக்கு அன்னபூரணியை அனுப்பினோம் என்று இடைக்காலப் பெருமையோ தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமே கிடைக்கப் போவதில்லை. அவை அந்தந்தக் காலகட்டங்களில், அந்தந்தச் சூழ்நிலைகளில் பெருமைக்குரிய விடயங்களாக இருந்திருக்கலாம். ஆனால்
புதிய பெருமைகளைச் சேர்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் இல்லாவிட்டால், பழைய பெருமைகளும் மங்கிப் போகும். ஆகவே, யதார்த்தத்தில் இன்று நிகழ்காலத்தில் எங்கள் நிலமை என்ன?
ஆகப்பிந்திய ஐணூராண்டு காலத்தில் எங்கள் நிலைமை எப்படியிருந்தது அதன் பின் - ஆகப்பிந்திய ஐம்பது ஆண்டுகளுக்குள் எங்கள் நிலைமை எப்படியிருந்தது? இப்போது நாங்கள் பெருமையோடு வாழ்கின்றேமா, அல்லது சிறுமையோடு வாழ்கின்றோமா? இவையே எங்கள் முன்னால் இன்று உள்ள கேள்விகள்.
ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்பு, தற்போது கொழும்பில் நிலைகொண்டிருக்கும் ஒரு மூத்த புகழ் பூத்த தமிழ் பேரறிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது, தமிழீழத் தலைவரும் சிறீலங்காப் பிரதமரும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதற்கு சொற்ப காலத்தின் பின்பு அப்போது நான் அவரிடம் கேட்டேன், இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்பு தென்னிலங்கைச் சிங்களவர்களின் மனநிலை எப்படியிருக்கிறது??. சிங்களப் பேரினவாதத்தின் ஒட்டுமொதமான உள உணர்வை அவர் ஒரே வார்த்தையில் அடக்கினார்- As a student of History, என்னால் ஒன்றைச் சொல்லமுடியும்: கடந்த 200 வருட காலத்தில் முதற் தடவையாக ஒரு தமிழனிடம் தோற்றுப்போய்விட்ட விரக்தியில் சிங்களவன் புளுங்கிக்கொண்டிருக்கிறான்.
உண்மையில் அது தான் இன்று எங்களது பெருமை. ஏனெனில் கடந்த ஐணூராண்டு காலமாக, அதிலும் கடந்த ஐம்பதாண்டு காலமாக, தமிழன் தோற்பதே சரித்திரமாக இருந்து வந்தது.
இன்றைய இந்தப் பெருமை எப்படிக் கிடைத்தது? ஐநூறு ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பாளர்களின் இரும்புப் பிடிக்குள் அல்ல, சொந்த அடிமை மனோபாவத்தின் அழுக்குக் குகைக்குள்ளே சிக்குண்டுகிடந்த தமிழினம் இன்று பெருமைக்குரிய இனமாக கம்பீரம் பெற்றிருக்கும் ஆச்சர்யம் எவ்வாறு நிகழ்ந்தது. போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று தமிழர்களை நோக்கி ஒரு காலத்தில் அறைகூவல் விடுத்தவர்கள், இன்று போரே வேண்டாம், சமாதானமே வேண்டும் என்று தமிழர்களின் கால்களில் விழுந்திருக்கும் யுகம் எப்படிப் பிறந்தது...!
அது தனியொரு மனிதனின் முப்பதாண்டு காலக் கடுந் தவத்தின் விளைவாய், தமிழினம் பெற்ற பேறு. அழுத்தங்களுக்கு அசையாத, ஆசை வார்த்தைகளுக்கு மயங்காத, துரோகங்களுக்குத் துவளாத விடாப்பிடியான மன ஒருமைப்பாடு குலையாத பிரபாகரன் என்ற அந்தப் பெருமனிதரின் தீர்க்கமான நீண்ட தவத்தின் பயன் அந்தப் பெருமை.
இன்று அந்தப் பெருமைக்கு மிகத் தெளிவான ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றெடுக்க வேண்டிய வரலாற்றுத் திருப்பு முனையில் தமிழினம் நின்றுகொண்டிருக்கின்றது.
தமிழினத்தைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 2ஆம் திகதி கடந்த ஐம்பத்தியாறு ஆண்டு கால சரித்திரத்தில் இரண்டாவது தடவையாக அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நாள் அலட்சியப் படுத்திவிட முடியாத ஒரு வரலாற்று நாள்.
எங்கள் தாய்த்தமிழ் இனத்திற்கு அரசியல் விளைவு மிக்க ஒரு சேவையைச் செய்ய ? மிகச் சரியான ஒரு தருணத்திற்காக நாங்கள் இதுவரை காத்திருந்தோமானால் அந்த உன்னத தருணம் இதுதான்.
1977 இல் நடந்த தேர்தலில் தனக்கு இன்னது தான் வேண்டும் என்று தன்னுடைய அரசியல் அபிலாசையையும், அரசியல் நிலைப்பாட்டையும் உத்தியோகபூர்வமாக உலகறிவித்தது ஈழத்தமிழினம்.
2004 இல் நடக்கவிருக்கும் தேர்தலில், தன்னுடைய அந்த அரசியல் அபிலாசையைப் பூர்த்திசெய்யும் ஆணையை அரசியல் அதிகாரத்தை இன்னாருக்கு வழங்கியிருக்கின்றோம் என்பதை உத்தியோகபூர்வமாக உலகறிவிக்கவிருக்கிறது ஈழத்தமிழினம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தங்கள் ஏகபிரதிநிதிகளாகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்கின்றர்கள் என்பது தவறான வாதம். உண்மையில் - ஏற்கெனவே தங்கள் தனிப்பிரதிநிதிகளாக அவர்கள் ஏற்றுககொண்டுவிட்ட விடுதலைப் புலிகளைத் தங்களது ஏக பிரதிநிதிகளாகத் தமிழர்கள் அதிகாரபூர்வமாகப் பிரகடனப் படுத்துகின்றார்கள் என்பதே சரியான வாதம்.
அந்த வகையில் தனது வாக்கழிப்பு உரிமையைத் தீர்க்கமான ஒரு செய்தியைச் சொல்லுவதற்கு ஒவ்வொரு தமிழனும் பயன்படுத்தப் போகிற துல்லியமான இரண்டாவது வாய்ப்பு இது.
இந்தத் தேர்தலில் நாங்கள் சில பேருக்கு அழுத்தம் திருத்தமான நிரந்தரமான சில செய்திகளை ஒரேயடியாகச் சொல்லிவைக்கப் போகின்றோம்.
தமிழீழத்தைக் கூறுபோட எத்தனிக்கும் எந்த வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளுக்கும், மற்றும் கருணா போன்ற பிரதேசவாதச் சந்தர்ப்பவாதிகளுக்கும் ஒரு தெளிவான பதில்
அது
தமிழீழத் தாயகத்தின் நில ஒருமைப்பாடு என்பது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் உயிர்மூலம் சக்தி என்பதில் தமிழ் பேசும் மக்களிடையே எவ்விதமான கருத்து வேறுபாடும் கிடையாது என்பது.
புலிகள் மட்டும் தான் ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு தன்னாட்சி உரிமை கேட்டு திரிகின்றார்கள் ஆனால், தமிழ் மக்களின் நிலைப்பாடு அதிலிருந்து மாறுபட்டிருக்கின்றது என்ற அமெரிக்கா போன்ற சில நாடுகளின் பழைய வாதத்திற்கு ஒரு தீர்க்கமான முற்றுப்புள்ளி.
அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்துச் செல்கின்ற அரசியல் -இராணுவப் போராட்டமானது, தமிழ் பேசும் மக்கள் இனமே அந்த இயக்கத்திற்குக் கொடுத்த ஏகோபித்த ஆணை என்பது.
புலிகளோடு மட்டும் பேசாமல் ஆங்காங்கே இடைக்கிடை சத்தம் போடும் ஏனைய உதிரிகளுடனும் கலந்து கதைக்க வேண்டும்? என்ற சில சிங்கள, தமிழ் மற்றும் உலகத் தரப்பினரது வாதத்திற்கு மிக வெளிப்படையான இரண்டு பதில்கள்.
முதலாவது
தமிழினத்தின் அரசியல் சுபீட்சத்திற்கு எது உகந்தது என்பதை!
அது தனியரசோ அல்லது ஏதோ ஒரு வடிவத்திலான தன்னாட்சி முறைமையோ என்பதை !
பேச்சு வார்த்தை முலமோ, போர் மூலமோ, அல்லது வேறு ஏதாவது சாத்தியமான வழிகளிலோ என்பதை !
உள்நாட்டு வெளிநாட்டு இராணுவ அரசியல் போக்கிற்கு அமைவாகத் தீர்மானித்துப் பெற்றுத்தரும் உரிமையையும், அங்கீகாரத்தையும் - தமிழ் பேசும் மக்கள் இனம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே வழங்கியுள்ளது என்பது.
இரண்டாவது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தங்கள் தனிப் பிரதிநிதிகளாக வரித்துக் கொண்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே எடுக்கின்ற முடிவை...!
தமிழீழ விடுதலைப் புலிகள் எடுக்கின்ற முடிவை மட்டுமே...!
தமிழ் பேசும் மக்கள் தங்கள் சொந்த முடிவாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது.
எனவே, ஒட்டுமொத்தமான எங்கள் இனத்தின் எதிர்காலத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட எங்கள் ஒவ்வொருவரது நிம்மதியிலும், சந்தோசத்திலும், நல்வாழ்விலும், கௌரவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் நாள் இந்த ஏப்ரல் 2.
வாக்களிப்பு உரிமையுள்ள நாங்கள் ஒவ்வொரும் வீட்டுக்கு வெயியே இறங்க வேண்டும். எமது சொந்த இனத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திபடைத்த எங்கள் தனிப்பட்ட அதிகாரபூர்வ உரிமையை நாம் ஒவ்வொருவரும் செவ்வனே பயன் படுத்த வேண்டும் ஏனெனில், எமது தேசியக் கடமையை நிறைவு செய்யக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது.
அரிய வாய்ப்பு என்றால், எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்பு... ஒரு கோடி ரூபாவுக்கு அதிஸ்ட இலாபச் சீட்டு வீழுந்தத போல அல்ல செவ்வாய் தோஷத்தோடு பிறந்து, நல்ல வாழ்வு கிடைக்காமல் காலம் கடந்துகொண்டிருக்கும் 35 வயதாகிவிட்ட சொந்த மகளுக்கு, அல்லது சொந்தச் சகோதரிக்கு - அற்புதமான ஒரு வரன் சாபலப்பொருத்தமாக அமைந்து விட்டது போன்ற வாய்ப்பு இது. ஆகவே இது சாதாரண வாய்ப்பு அல்ல.
என்னுடைய ஒரு வாக்கு ஒட்டுமொத்தமான தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றிக்கு அப்படி என்னதான் சிறப்புச் சேர்த்துவிடப் போகிறது?? என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பதில் எங்கள் ஒவ்வெருவருக்கும் இருக்கும் உரிமையும் அந்த ஒரு வாக்குத்தான். சிறு துளி பெருவெள்ளம் என்பது சிறுவயது முதலே நாங்கள் படித்த பாடம். ஏங்கள் ஒவ்வொருவரது தனித்த வாக்குகளும் நாளை தமிழ் தேசிய இனத்தின் பெரு வெற்றியாகப் பிரவகிக்கும்.
புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை, தங்கள் வாக்குகளும் ஏதோ ஒரு வகையில் அளிக்கப்பட அவர்கள் வழிசெய்ய வேண்டும். அத்தோடு தாயகத்தில் வாழும் தங்கள் உற்றார்கள், உறவுகள், நண்பர்களையும் வாக்களிக்க உற்சாகப்படுத்த வேண்டும்.
அடிப்படையில் இந்தத் தேர்தலின் மூலம் நாங்கள் செய்யப் போகும் ஒரே வரிப் பிரகடனம் இது தான் தமிழரின் படையல்ல, தமிழரே புலிப்படை...!
செய்வோமா?
இங்கே திருவாளர் ஆனந்தசங்கரி ஐயா ஒரு விடயத்தைக்கருத்தில் கொள்ள வேண்டும்.
ஐயா!,
உங்கள் கட்சிக்காரர்களுடனேயே உங்களுக்கு முரண்பாடு வந்த காலத்திலிருந்தே, கட்சியைக் காக்க வேண்டும். கட்சியின் பாரம்பரியததைக் காக்க வேண்டும். கட்சியின் கொள்கைகளைக் காக்க வேண்டும். அதற்காகத்தான் நான் போராடுகின்றேன். நான் மட்டும் தான் அதைச் செய்கின்றேன். என்று தொடர்ச்சியாக இடைவிடாமல் சொல்லிவருகின்றீர்கள். கட்சி அது தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
அதன் பாரம்பரியம் அது தமிழர் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றது. அதன் கொள்கை தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது. ஆனால், நீங்களெல்லாம் கதையிலேயே காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருந்த போது, இவையெல்லாவற்றையும் செயலிலே நடைமுறைப்படுத்திவருவது விடுதலைப் புலிகள் மட்டுமே என்பதில் தமிழரின் எதிரிகளுக்குள் கூட கருத்துவேற்றுமையில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் தேசிய இனத்தின் ஏக பிரதிநிதிகளாக நீங்கள் ஏற்கின்றீர்களா இல்லையா என்பது இங்கு ஒரு பிரச்சனையே அல்ல. இது தொடர்பான உங்கள் நிலைப்பாடு பற்றி யாருக்கு என்ன அக்கறை...?? ஏனெனில், உங்களுடைய அரசியல் எதிர்காலம் என்ன என்பது தான் இன்னும் இரண்டே நாட்களில் உங்களுக்கே தெளிவாகத் தெரிந்துவிடப் போகின்றதே. ஆனால்
புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிகள் இல்லை என்றும் ஆனால் புலிகளுடன் தான் பேச வேண்டும் என்றும் ஒரு புதிரான வியாக்கியானம் பேசிக்கொண்டு, நீங்கள் உங்களையும் குழப்பி அடுத்தவர்களையும் குழப்ப முனைகின்ற மர்மம் தான் புரியவில்லலை. ஏதோ தமிழர்களுக்காக் குரல் கொடுக்க வந்த இரட்சகன் நீங்கள் தான் என்பது மாதிரி தங்கு தடையின்றி ஒப்பாரி வைக்கின்றீர்கள். ஆனால், வன்னியில் ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலத்தில் உங்களைப்பற்றி எக்கச்சக்கமான கதைகள் வந்தனது. மன்னிப்போம் மறப்போம் என்பதெல்லாம் பழைய வேதம். தமிழினத்தின் புதிய வேதம் எப்படியெனில் - நாங்கள் சிலவேளை மன்னிப்போம் ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்.
சங்கரி ஐயாவுக்கு மட்டுமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் தேர்தலில் இறங்கிவிட்டு, இப்போது கருணாவின் எடுபிடிகளாகி பிரதேச வாதம் பேசுகின்றவர்களுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.
தனி ஒரு மனிதனாக ஒட்டுமொத்தத் தமிழ் தேசிய இனத்தையும் ஒரே கூடாரத்தின் கீழ் திரட்டியெடுத்தது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத்தில் முதற்தடவையாக தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய மாபெரும் அதிசயம்.
சிங்களத் தரப்பைத் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர வைத்தது, ஆயுதப் போராட்டம் மட்டுமன்றி இந்த ஒற்றுமையுந்தான். இப்படியான ஒரு வரலாற்றுப் புறநிலையில் ஆளுக்கொரு பிரிவாக நின்றுகொண்டு, ஆளுக்கொரு திசையில் இழுத்தால், உண்மையில் நாசமாகப் போவது சமாதானத்துக்கான முன்னெடுப்புகள் அல்லது மாறாக வடக்கு கிழக்கு என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ் தேசிய இனத்தின் எதிர்காலம் தான். பலாஸ்த்தீன மக்களுக்கு விழுந்த சாபக்கேடு, பக்கத்தில் யூதர்கள் குடியேறிது அல்ல இந்த ஒற்றுமையின்மை தான். அதனால் தான் அவர்கள் இன்றும் துன்பத்தின் மடியில் துவண்டுகொண்டிருக்கின்றார்கள். அதே சாபக்கேட்டை தமிழர்களுக்கும் ஏற்படுத்தி வரலாற்றுப் பழி சுமக்காமல், போகிற காலத்தில் ஏதாவது புண்ணியம் தேட முடியுமா என்று பாருங்கள். </span>
குழைக்காடான்.
நன்றி சூரியன் டொட் கொம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>