04-01-2004, 12:25 AM
kuruvikal Wrote:<span style='color:red'>யாழ். தேர்தல் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட சிங்களவர்கள் யாழ். பயணம்
ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, வேட்பாளர் ஆனந்தசங்கரி உட்பட பேரினவாதத்திற்குத் துணைபோகும் சிலர் கொடுத்த கடுமையான அழுத்தத்தின் விளைவாக, யாழ். தேர்தல் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட, 10 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
தேர்தல் வன்செயல்களைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் இத்திடிர் முடிவு தமிழ்ப்பகுதிகளில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி உட்பட வேறுசில வட்டாரங்களினாலும் கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அடுத்தே நிலையத்தின் தலைவர் பாக்கிய சோதி சரவணமுத்து சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்கே அனுப்பும் முடிவுக்கு வந்தார் எனக் கூறப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தல்களின்போதும் சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்குக்கு இந்நிலையம் அனுப்பவில்லை. சர்வதேசக் கண்காணிப்பாளர்களோடு உள்ளுர் தமிழ்க் கண்காணிப்பாளர்கள் சிலர் சேர்ந்தே கடந்த காலங்களில் வடக்கின் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
ஆனால், உள்ளுர் தமிழ்க் கண்காணிப்பாளர்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சிங்கள மற்றும் முஸ்லிம் கண்காணிப்பாளர்கள் வடக்கில் பணியாற்ற அழைக்கப்பட வேண்டும் என்றும், டக்ளஸ் தேவானந்தா அண்மைக் காலத்தில் வலியுறுத்தி வந்தார். சுயேட்சை வேட்பாளர் ஆனந்தசங்கரியும் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
இந் நிலையில் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் ஐவர் மட்டுமே தேர்தல் வன்செயல்களைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் இம்முறை வடக்கில் பணியில் அமர்த்தப்படுவர் எனக் கூறப்பட்டு வந்தது.
எனினும், தேர்தலுக்கு இரண்டு நாள் இருக்கையில், இறுதி நேரத்தில், பத்து சிங்களக் கண்காணிப்பாளர்களை வடக்கே பணிக்கு அவசர அவசரமாக அனுப்பிவைக்க நிலை யத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் வன்செயல்களைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஐவருக்கு மேலதிகமாக சிங்களக் கண்காணிப்பாளர்கள் பத்துப்பேர் இம்முறை வடக்கில் கண்காணிப்பில் ஈடுபடுவர். தமிழர்கள் எவரும் இந்தக் கண்காணிப்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்தப் பத்து சிங்கள கண்காணிப்பாளர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, யாழ். தொகுதியில் நடந்த வன்முறைகளை ஆராயவுள்ளதால், இது யாழ். தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அமையுமென்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆசனங்களையும் கைப்பற்றும் பட்சத்தில், சிங்களக் கண்காணிப்பாளர்களின் கூற்றை வைத்து, தேர்தல் முடிவுகளை செல்லுபடியற்றதாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.</span>
<b><span style='font-size:21pt;line-height:100%'>தமிழினமே ஏன் இந்த நிலை உனக்கு...தன்னினத்தையே இன்னோர் இனம் கொண்டு கண்காணிப்பவன் நாளை உங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் போவதற்காய் தேர்தலில்....என்னே வேடிக்கை...சன நாய் அகத்தின் மாஜாலாம் கோலோஞ்சி விட்டதோ.....வெறும் 15 கள்ள வாக்குகளால் பாராளுமன்றம் போய் சுகபோகம் கண்டபோது எந்தச் சிங்களவன் கண்காணித்தானோ.....????! ஏதோ நடக்கட்டும்....எமக்கும் வாக்குச் சீட்டுக்கும் தொடர்பே வேண்டாம் என்றுதானே அறுத்துவிட்டோமே....???!</b></span>
நன்றி புதினம்...!
சிங்களப் பகுதிகளில் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்கள் !
தமிழர் பகுதியில் தேர்தலை கண்காணிக்க சிங்கள பார்வையாளர்கள் !
ஏன் என்று நினைக்கின்றீர்கள்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

