03-31-2004, 05:12 PM
மட்டக்களப்பில் அமைதிநிலை வேண்டி மதத்தலைவர்கள் அவசர வேண்டுகோள்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 31 மார்ச் 2004, 22:26 ஈழம் ஸ
பல்மதங்கள் சார்ந்த தலைவர்கள் அனைவரும் இணைந்து வெளியிட்டுள்ள அவசர வேண்டுகோளில், மட்டக்களப்பில் அமைதியையும் பொறுமையையும் பேணும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் பழியுணர்வுடன் கூடிய செயற்பாடுகள் மிகவும் கவலையும் பயமும் தருவதாகக் குறிப்பிடும் அவ்வறிக்கையில், மட்டக்களப்பில் செயற்படும் ஐந்து பிரதான சமய நிறுவனங்களின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்.
மட்டு-திருமலை கத்தோலிக்க ஆயர் கலாநிதி அதிவண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, பிரதான இந்துக்குருக்கள் கருணாகர மகேஸ்வர குருக்கள், கோட்டமுனை மெதடிஸ்த ஆலய தலைமைப் பணியாளர் வண.ஏ.ஆர்.மகேந்திரன், பிரதான இஸ்லாமிய மதத்தலைவர் மௌலாவி ஏ.Nஐ.எம்.இல்யாஸ், மட்டு. புனித அன்ட்ரு ஆலய குருமுதல்வர் வண.எஸ்.நோவா துரைசாமி ஆகியோர் ஒன்றாகக் கைச்சாத்திட்டு வெளியிட்டுள்ள அவசர வேண்டுகோளிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
<b><span style='color:#ff0012'>'மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை. கடவுளிடமிருந்து வழங்கப்பட்ட மிகப்பெரிய கொடைதான் மனித உயிர். அனைத்துத் தரப்பினரும் இணைந்து, மனித உயிர்களை மதித்துப் பேணுவது அவசியம். கருத்து வேற்றுமைகளுக்காக உயிர்களைக் கொல்லுவதை, யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமென்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால், கொலை செய்வதையும், கொலைக்கு முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்தும்படி அனைத்துத் தரப்பினரிடமும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து மதங்களும் மனிதத்தை மதிப்பதையும், இணைந்து வாழ்வதையும், மன்னித்து ஏற்றுக்கொள்வதையுமே போதித்து நிற்கின்றன. நாங்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் தான். அனைவரையும் மன்னித்து ஏற்றுக்கொள்வதே மனித மாண்புடன் கூடிய அன்பு வாழ்வாகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அவசியமானது. அனைத்து மக்களும் பயமின்றி வாழும் ஓர் சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் அவசர தேவையாக இருக்கிறது.
ஐனநாயகத்திற்கு முரணானதும் மனித மாண்புகளுக்கு எதிரானதுமான சில செயற்பாடுகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்து வருவதை அவதானித்து, மக்கள் மிகவும் கலவரமடைந்திருக்கிறார்கள். இன்னுமொரு போருக்கு நாம் தயாராக வேண்டுமோ என்ற ஏக்கமும் பயமும் கலக்கமும் மக்களை மீண்டும் பீடித்துள்ளது. [b]ஆயுதத்தாலும் கொலையாலும் மட்டும் நாம் சமாதானத்தையோ சுதந்திரத்தையோ எட்டி விட முடியாது</b> என்பதை உணர்ந்து, மன்னிப்பதன் மூலம் நிரந்தர சுமூக நிலையை உருவாக்க அனைத்துத் தரப்பும் முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
[b]பயமுறுத்தல், கொலை, கொலை முயற்சி, வன்முறை போன்றவற்றின் மூலம் அப்பாவி மக்களும் வேட்பாளர்களும் அரசாங்க உத்தியோத்தர்களும் புத்திஐPவிகளும் கட்டாயப்படுத்தப்படுவதை நாம் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அண்மைக்கால நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திக்கிறோம். தொடர்ந்தும் இந்நிகழ்வுகள் நடைபெறாதிருக்க அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பை அவசரமாகக் கேட்டு நிற்கிறோம்."
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது. </span>
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>